இந்திய வரலாற்றில் முதன்முறையாக தனியார் நிறுவனத்தின் பெயரில் விரைவுத் தொடர் வண்டி

சிறப்பு புத்தக சலுகைகள்

புதுடில்லி, ஆக.14- தனியார் பிராண்ட் பெயரில், தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை நாட்டில் முதல்முறையாகத் தொடங்கப்பட உள்ளது.

வணிக விளம்பரத்திற்காக நிறுவனங்களின் பெயர்களை விளம்பரத்துடன் ரயில்களை இயக்கும் நடைமுறை பல் வேறு உலக நாடுகளில் உள்ளது. இந்தியாவில் சில நிறுவ னங்கள் விளம்பரம் செய்ய ரயில்களை முழுமையாகப் பயன் படுத்துகின்றன. அந்தவகையில், இந்தியாவின் முதல் தனியார் பிராண்ட் பெயரில் ரயில் இயக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ‘ஸ்ப்ரைட்’ தேஜஸ் எக்ஸ்பிரஸ் (Sprite Tejas Express) என்ற பெயரில் தனியார் சேவை இயங்க உள்ளது. இந்த ரயில் லக்னோ மற்றும் டில்லி இடையே இயக்கப்பட உள்ளது.

கோகோ கோலா நிறுவனம் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கான விளம்பர பிராண்டிங் உரிமையைப் பெற்றுள்ளது. இதன்படி, 5 எல்.எச்.பி (LHB) பெட்டிகள் ஸ்ப்ரைட் விளம்பர வடிவமைப்புடன் இயக்கப்படுகின்றன. 6 மாத காலத்திற்கு விளம்பர உரிமம் வழங்கப்பட்டுள்ளது.

ஸ்பிரைட் நிறுவனத்திற்கு ஐஆர்சிடிசி (IRCTC) அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து, இந்த ரயிலை ‘ஸ்பிரைட்’ தேஜஸ் எக்ஸ் பிரஸ் என்று அறிவிக்குமாறு வட கிழக்கு ரயில்வேக்கு அறிவுறுத்தப் பட்டதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.

பயணத்தின் இரு திசைகளிலும், ரயில் புறப்படும் மற்றும் வழியில் உள்ள நிலையங்களில் இந்த ரயில் ‘ஸ்ப்ரைட்’ தேஜஸ் எக்ஸ்பிரஸ் என்று அறிவிக்கப்படும். தேஜஸ் எக்ஸ்பிரஸ் முழுமையான குளிர்சாதன வசதி கொண்ட அதி வேக ரயில், நவீன வசதிகளுடன் கூடியது. பயணத்தின்போது உணவு வகைகள் மற்றும் பொழுதுபோக்கு வசதிகள் ஆகியவை சிறப்பாக உள்ளன என்று ஐஆர்சிடிசி தெரிவித்துள்ளது.

‘ஒரு பிராண்டின் பெயரில் ரயில் ஒன்று அழைக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். லக்னோ- டில்லி தேஜஸ் எக்ஸ்பிரஸ் ஒரு தனியார் ரயிலாக இருந்தாலும், தண்டவாளங்கள் மற்றும் ரயில் நிலையங்கள் போன்ற உள்கட்டமைப்பைப் பயன் படுத்துவதற்கான கட்டணங் களை இந்திய ரயில்வேக்குச் செலுத்துகிறது,’ என்று ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *