அரசுத் துறைகளில் 3 லட்சம் இடங்கள் காலியாக உள்ள நிலையில் 41 காலி இடங்களை நிரப்ப மட்டும் குரூப்-2 தேர்வு அறிவிப்பு தேர்வர்கள் கொந்தளிப்பு

சிறப்பு புத்தக சலுகைகள்

சென்னை, ஆக. 13- அரசுத் துறைகளில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ள சூழலில் வெறும் 41 காலியிடங்களை நிரப்புவதற்காக டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டிருப்பது அவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி யுள்ளது. இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் கூறியதாவது:

அரசுத் துறைகளில் லட்சக் கணக்கான காலியிடங்கள் இருப்ப தாக அரசு ஊழியர் சங்கங்கள் கூறுகின்றன. ஊழியர்கள் பற்றாக் குறை காரணமாக, மூன்று நான்கு பேர் செய்யக்கூடிய அலுவல் களை ஒரே ஊழியர் செய்ய வேண்டியுள்ளது. இதனால், அரசு ஊழியர்களுக்கு பணிச்சுமை அதிகரித்துள்ளது.

முதலமைச்சருக்கு வேண்டுகோள்

அரசுத் துறைகளில் உள்ள அனைத்து காலிப்பணியிடங்களும் விரைந்து நிரப்பப்படும் என தவெக தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது. அதன் அடிப்படையில், அதிக எண்ணிக்கையிலான தேர்வர்கள் எழுதக்கூடிய குரூப்-4 , குரூப்-2 தேர்வுகளுக்கு காலிப்பணியிடங்கள் அதிகம் நிரப்பப்படும் என எதிர்பார்த்தோம்.

ஆனால், எங்கள் நம்பிக்கைக்கு நேர் மாறாக குரூப்-2 தேர்வு மூலம் வெறும் 41 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஒருங்கிணைந்த குரூப்-2 தேர்வு மூலம் குறைந்தபட்சம் 2 ஆயிரம் காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்த்தோம். ஆனால், குரூப்-2 தேர்வு மூலம் 41 காலியிடங்களும், குரூப்-2 ஏ தேர்வு மூலம் 780 காலியிடங்களும் என இரு தேர்வுகளும் சேர்த்து 821 பணியிடங்கள்தான் நிரப்பப்பட உள்ளன.

சாதாரணமாக குரூப்-2 தேர்வுக்கு சுமார் 8 லட்சம் பேர் விண்ணப்பிக்கிறார்கள். இத்தனை பேர் விண்ணப்பிக்கக்கூடிய தேர்வுக்கு வெறும் 41 காலியிடங்களே அறிவிக்கப்பட்டிருப்பது எங்களுக்கு மிகுந்த ஏமாற்றமாக இருக்கிறது. எனவே, குரூப்-2, குரூப்-2 ஏ தேர்வு மூலம் கூடுதல் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையிட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநில தலைவர் த.அமிர்தகுமார் கூறும்போது, “தமிழக அரசு பணியில் அனைத்து வகை பதவிகளையும் சேர்த்தால் ஏறத்தாழ நான்கரை லட்சம் காலிப்பணியிடங்கள் வரும்.

நிதிச்செலவினங்களை குறைக்கும் நோக்கில் காலியிடங்கள் காண்பிக்கப்படுவது இல்லை. லட்சக்கணக்கானோர் எழுதும் தேர்வுக்கு குறைந்த காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்படும்போது, அது கடும் போட்டியை ஏற்படுத்தும். இரண்டு மூன்று முறை தேர்வெழுதி பணி கிடைக்காத இளைஞர்களுக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு அவர்கள் தங்களுக்கு அரசுப் பணி கிடைக்காது என்ற நிலைக்கு வந்துவிடுவார்கள். அரசுத் துறைகளில் காலியிடங்கள் அதிகளவு இருப்பதால் குரூப்-2 தேர்வில் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு முன்வர வேண்டும்” என்றார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *