பெய்ஜிங், ஆக.13- சீனாவின் முன்னாள் பிரதமரும், அந்நாட்டின் பொருளாதாரச் சீர்திருத்தங்களின் சிற்பியாகக் கருதப்படுபவருமான ஜூ ரோங்ஜி (98), வயதுமூப்புக் காரணமான உடல்நலக் குறைவால் பெய்ஜிங்கில் புதன்கிழமை காலமானார்.
கடந்த 1998 முதல் 2003 வரை சீனாவின் பிரதமராகப் பதவி வகித்த ஜூ ரோங்ஜி, உலக வர்த்தக அமைப்பில் சீனா இணைவதற்கு முக்கியப் பங்காற்றினார். மேலும், ஊழலுக்கு எதிரான கடும் நடவடிக்கைகளும், சந்தை சார்ந்த பொருளாதாரக் கொள்கைகள் மூலம் சீர்திருத்தங்களையும் மேற்கொண்டு, பன்னாட்டு அளவில் சீனா ஒரு பொருளாதார வல்லரசாக உருவெடுக்க அடித்தளமிட்டார்.
இந்தியா-சீனா இடையேயான இருதரப்பு உறவுகளை மேம்படுத்தி, ஒன்றுக்கொன்று நம்பிக்கையை வளர்க்கும் நோக்கில், இவர் கடந்த 2002-இல் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டு, அப்போதைய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயுடன் விரிவான பேச்சு நடத்தியது குறிப்பிடத்தக்கது.
சீன முன்னாள் பிரதமர் ஜூ ரோங்ஜி காலமானார்!
Leave a Comment
