கடவுள் காப்பாற்றவில்லையே! திருத்தணி முருகன் கோயிலில் பெண் பக்தர் சேலையில் தீ!

சிறப்பு புத்தக சலுகைகள்

திருத்தணி, ஆக. 13- வேலூர் மாவட்டம் சலவன்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் முனிகண்ணணன் (வயது 65). இவர் தனது மனைவி சுசிலாவுடன் (62) நேற்று (12.8.2026) திருத்தணி முருகன் கோவிலுக்குச் சாமி தரிசனம் செய்ய வந்தார்.
மலையடிவாரத்தில் உள்ள சரவணப்பொய்கை குளம் அருகே சுசிலா நேர்த்திக்ககடனுக்காக தீபம் ஏற்றிக்கொண்டிருந் தார்.
அப்போது எதிர்பாராத விதமாக அவரது சேலையில் தீப்பிடித்தது. தீக்காயம் அடைந்த சுசிலா அலறி துடித்தார். அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிகழ்வு குறித்து திருத்தணி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தீபம் ஏற்றியபோது பெண் பக்தரின் சேலையில் தீப்பிடித்த சம்பவம் திருத்தணி கோயில் வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *