சில வரி செய்திகள்

1 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

எனது வாக்குரிமை பறிக்கப்பட்டது: பிரகாஷ் ராஜ்

தேர்தல் சிறப்புத் திருத்தத்தில் தனது பெயர் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டதாக பிரகாஷ் ராஜ் காட்சிப் பதிவு வெளியிட்டுள்ளார்.

அதில், நான் பெங்களூருவில் பிறந்து வளர்ந்தவன். எம்.பி.-க்கும் போட்டியிட்டுள்ளேன். அவர்கள் என்ன ஆவணங்கள் கேட்கிறார்கள் என்று பார்ப்போம்.

மோடி, உங்களுக்கு வாக்களிக்காதவர்களை நீக்கும் அதிகாரம் உங்களிடம் இருக்கலாம். ஆனால், உங்களை பதவியிலிருந்து நீக்குவதை உங்களால் தடுக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

‘வந்தே மாதரம்’ பாட
12 நிமிடம் நிற்க வேண்டுமா?

‘வந்தே மாதரம்’ கட்டாயமாக்குவதில் உள்ள நடைமுறை சிக்கலை சசிதரூர் சுட்டிக்காட்டியுள்ளார். வந்தே மாதரம் (3 நிமிடங்கள், 10 வினாடிகள்), ஜன கண மன (52 வினாடிகள்), தமிழ்த்தாய் வாழ்த்து (2 நிமிடங்கள்) பாடுவதற்கு நேரம் எடுக்கின்றன.

ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் முன்னும் பின்னும் என 12 நிமிடங்கள் கூடுதலாக எடுக்கிறது. வந்தே மாதரம் சட்டம் தேசிய பாடலுக்கான மரியாதையை மேம்படுத்துவதை விட, எதிர்மறை தாக்கத்தையே ஏற்படுத்தும் என எச்சரித்துள்ளார்.

பிஜேபி ஆளும் உத்தரப்பிரதேசத்தில் போலிச் சான்றிதழ்கள் மூலம் வழக்குரைஞராகப் பதிவு செய்த 39 பேர் மீது வழக்கு.

அதிகரிக்கும் மழைப் பொழிவு காரணமாக தமிழ்நாட்டில் டெங்கு, சிக்குன் குனியா பரவும் அபாயம், மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவிப்பு.

பத்தாம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் மாணவர்களுக்கு இன்று முதல் விநியோகம்.

துணைவேந்தர் நியமனம், சட்டத் திருத்தமே தீர்வு, முன்னாள் துணைவேந்தர் திருவாசகம் கருத்து.

இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி தான் அருணாசலப் பிரதேசம், சீனாவின் எதிர்ப்புக்கு இந்தியா பதிலடி!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *