புதிய நாடாளுமன்றம், புதிய பிரதமர் இல்லம் ஆனால் புதிதாக பள்ளிகள் கிடையாதா? கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கேள்வி

1 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

மும்பை, ஆக. 12- கிராமங்களில் உள்ள அரசுப் பள்ளிகளை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் வரும் ஆக.15ஆம் தேதி நாடு தழுவிய பிரச்சாரம் தொடங்கப்படும் என அபிஜித் திப்கே அறிவித்துள்ளார்.

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) என்ற அமைப்பின் நிறுவனர் அபிஜித் திப்கே சமூக வலைதளத்தில் ஒரு காட்சிப்பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: இந்தியா சுதந்திரம் அடைந்து 80 ஆண்டுகள் ஆகின்றன. ஆனாலும் நாடு முழுவதும் கிரா மங்களில் உள்ள அரசுப் பள்ளிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. இன்ன மும் மாணவர்கள் பள்ளிகளுக்கு நீண்டதூரம் நடந்து செல்லும் நிலை உள்ளது. மேலும் குடிநீர், கழிப்பறை வசதி இல்லை. இதனால் குறிப்பாக பெண் குழந்தைகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

நாம் புதிய நாடாளுமன்றத்தையும், புதிய பிரதமரின் இல்லத்தையும் அமைத்துள்ளோம். ஏன் நம்மால் கிராமங்களில் புதிய பள்ளிகளை உருவாக்க முடியவில்லை? கிராமங் களில் உள்ள விவசாயிகள் மற்றும் கூலித் தொழிலாளர்களின் குழந்தைக ளை நமது நாட்டின் எதிர்காலமாக நாம் கருதவில்லையா? அந்தக் குழந்தைகளுக்காக நாம் என்ன செய்துள்ளோம், பெரிய நகரத்தில் ஒரு குழந்தைக்குக் கிடைக்கும் வசதிகளை அவர்களால் பெற முடியாத நிலையை ஏன் மாற்ற முடியவில்லை?

80ஆவது சுதந்திர தினமான வரும் 15ஆம் தேதி, அரசுப் பள்ளிகளை மேம்படுத்த வலியுறுத்தி நாடு தழுவிய பிரச்சாரம் தொடங்கப்படும். இந்த பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, மகாராட்டிராவின் மராத்வாடா பகுதியில் உள்ள எனது கிராமமான ஹிங்கோலிக்குச் சென்று, அங்குள்ள அரசுப் பள்ளிகளை மேம்படுத்துமாறு கிராமத் தலைவரிடம் கோரிக்கை விடுக்க உள்ளேன்.

இந்த காணொலியைக் காணும் அனைத்து கிராமத் தலைவர்களும், பெற்றோரும் தங்கள் கிராமங்களில் உள்ள அரசுப் பள்ளிகளின் நிலையை மேம்படுத்த உதவ வேண்டும். பள்ளிகள் மேம்படுத்தப்பட்ட பிறகு உள்ள நிலை குறித்த நிழற்படம், காட்சிப்பதிவுகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள். அவை சிஜேபி-யின் சமூக ஊடகங்களில் வெளியிடப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *