மூன்றாம் கட்ட எஸ்அய்ஆர் பணி இதுவரை 1.5 கோடி வாக்காளர் பெயர்கள் நீக்கம்!

1 Min Read

புதுடில்லி, ஆக. 10- தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ள மூன்றாம் கட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்அய்ஆர்) பணியில் இதுவரை சுமார் 1.5 கோடி வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டில்லி, ஒடிசா, மிசோரம், சிக்கிம், மணிப்பூர், உத்தராகண்ட், ஆந்திரா, அருணாச்சல் பிரதேசம், அரியானா, சண்டிகர், தெலங்கானா, பஞ்சாப், கருநாடகா, மேகாலயா, மகாராட்டிரா, ஜார்கண்ட், நாகலாந்து, திரிபுரா, தாத்ரா மற்றும் நகர் ஹவேலி, டையூ மற்றும் டாமன் என மொத்தம் 16 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களில் மூன்றாம் கட்ட எஸ்அய்ஆர் பணி நடைபெறுகிறது.

இந்த பணியின் கீழ் இதுவரை 12 மாநிலங்களுக்காக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மற்ற இடங்களில் எஸ்அய்ஆர் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகி உள்ள 12 மாநிலங்களில் மொத்தம் 13,77,27,807 கோடி வாக்காளர்கள் இருந்துள்ளனர். அவர்களில் வசிப்பிடத்தில் இல்லாதவர்கள், இடம்பெயர்ந்து சென்றவர்கள், உயிரிழந்தவர்கள் என சுமார் 1,58,59,834 கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைய தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது. இதன் மொத்தம் சதவீதம் சுமார் 11.51%.

அதிகபட்சமாக தாத்ரா மற்றும் நகர் ஹவேலி, டையூ மற்றும் டாமன் பகுதியில் சுமார் 29.64 சதவீத வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். அருணாச்சலப் பிரதேசம் 19.09%, அரியானா 16.38%, சத்தீஸ்கர் 12.8%, மிசோரம் 5.2%, மணிப்பூர் 7.5%, உத்தராகண்ட் 10.39%, சண்டிகர் 12.8%, மேகாலயா 7.67%, ஜார்கண்ட் 16.48% வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் 44.89 லட்சம் வாக்காளர்கள், அரியானாவில் 33.83 லட்சம் வாக்காளர்கள், ஒடிசாவில் 20.12 லட்சம் வாக்காளர்கள்,சிக்கிமில் 37,724 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நீதிமன்ற வழக்குகளை தொடுத்துள்ளது. இருப்பினும் கடந்த மார்ச் மாதம் தேர்தல் ஆணையம் எஸ்அய்ஆர் பணியை மேற்கொள்ள உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *