மதக் கலவரத்தைத் தூண்டும் உ.பி. காவல் கண்காணிப்பாளர்

1 Min Read

லக்னோ, ஆக.9 பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். குண்டர் கள்தான் நாட்டில் மத வன்முறையைக் கிளப்பும் வகையில் பேசி வருகின்றனர். ஆனால் தற்போது பா.ஜ.க. ஆளும் மாநிலங்களின் அரசு உயரதிகாரிகள் கூட மதக் கலவரத்தைத் தூண்டும் வகையில் பேச ஆரம்பித்துவிட்டனர்.
கோராக்பூர் மடத்தின் தலைமைச் சாமியாரான ஆதித்யநாத் முதலமைச்சகராக இருக்கும் உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூரின் காவல் கண்காணிப்பாளராக இருப்பவர் அனில் குமார் சிங். இவர் ஆதித்யநாத்திற்கு மிக நெருக்கமான நபர் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில்,அனில் குமார் சிங், ‘‘ஒரு உண்மையான முஸ்லிம் எப்போதுமே பசுக்களை அறுத்து உண்ண மாட்டார். அவ்வாறு செய்பவர்கள் முஸ்லிம்கள் அல்ல” என சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். அனில் குமாரின் இந்தகருத்துக்கு மாநிலம் முழுவதும் கடும் எதிர்ப்புக் கிளம்பியது. குறிப்பாக முஸ்லிம்கள் கணிசமாக வாழும்பகுதிகளில் பதற்றமான சூழல் ஏற்பட்டது.
இதனால் பதற்றமடைந்த அனில் குமார், ‘‘கடந்த பதினைந்து நாட்களில் மாட்டி றைச்சிக்காக விலங்குகளை அறுப்பதாகக் கூறப்படுபவர்களுடன் தங்களது காவல்துறை குறைந்தது மூன்று என்கவுண்டர்களில் ஈடு பட்டுள்ளது. அதனால்தான் வெறுமனே ஒரு சமூக மற்றும் இணக்கமான வேண்டுகோளை விடுத்தேன். மத உணர்வுகளை புண்படுத் தும் நோக்கம் தனக்கு இல்லை” என்று விளக்கம்அளித்து சமாளித்துள்ளார். எனினும் முஸ்லிம்கள் கணிசமாக வாழும் பகுதிகளில் போராட்டம் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *