தி.மு.க.வில் தொடர்வதாக ம.தி.மு.க. எம்.எல்.ஏ.கள் அறிவித்தனர்

1 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

மதிமுகவை சேர்ந்த 2 சட்டமன்ற உறுப்பினர் தாங்கள் திமுகவில் தொடர்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். பொதுமக்களின் விருப்பத்துக்கு ஏற்ப திமுக சட்டமன்ற உறுப்பினர்களாக தொடர்வதாக சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்செல்வன், கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் ராசேந்திரன் இருவரும் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். கடந்த தேர் தலில் திமுகவின் சின்னத்தில் போட்டி யிட்டு வெற்றி இவர்கள், வைகோ வலியுறுத்தியும் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலக செய்ய மறுத்து விட்டனர்.

காஷ்மீருக்கு மாநிலத் தகுதி எப்போது? ஒவைசி கேள்வி

370-ஆவது சட்டப்பிரிவு நீக்கப் பட்டு இன்றுடன் 7 ஆண்டுகள் ஆன போதிலும், ஏன் இன்னும் காஷ்மீருக்கு மாநிலத் தகுதி வழங்கப்படவில்லை என ஒவைசி கேள்வி எழுப்பியுள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பில், இன்னும் அங்கு தீவிரவாத தாக்குதல்கள் தொடர்கிறது. அரசியலமைப்பிற்கு எதிரான முறையில் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (POK) தொடரும் வன் முறைக்கு தனது கண்டங்களையும் பதிவு செய்தார்.

நிதி நிலை அறிக்கையில்
பெயர் மாற்றம் செய்யப்பட்ட திட்டங்கள்

கடந்த ஆட்சியில் இருந்த சில திட் டங்கள் பெயர் மாற்றம் செய்யப்பட்டு மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது.

*உங்கள் கையில் உலகம் – வெற்றி மடிக்கணினி,

* விலையில்லா சைக்கிள் திட்டம் – நவீன சைக்கிள் திட்டம்,

* அரசு மாதிரி பள்ளி & தகைசால் பள்ளி – காமராஜர் சிறப்புப் பள்ளி,

* நான் முதல்வன் – வெற்றி திறன் பயிற்சி திட்டம்.

* கலைஞர் கனவு இல்லம் திட்டம் – வெற்றி வீடு வழங்கும் திட்டம்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *