சென்னை, ஆக. 4- அரசுப் பள்ளி மாணவர்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வகையில், அவர்களுக்குப் பல் பரிசோதனை செய்யும் திட்டம் விரைவில் செயல் படுத்தப்படும் எனப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதன் சுருக்கம்:
பல் பரிசோதனை திட்டம்
மாணவர்களுக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்வதன் ஒரு பகுதியாக, பற்கள் பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தப் பரிசோதனையின் மூலம், மாணவர்கள் ஏதேனும் போதைப் பொருட்களைப் பயன்படுத்துகிறார்களா என்பதையும் கண்டறிய முடியும்.
பள்ளிச் சீருடையில் மாற்றம்
பள்ளிக் கல்வியின் சிக்கல்களை மாணவர்கள், ஆசிரியர்கள், பள்ளிக் கூடம் என மூன்று பிரிவுகளாகப் பிரித்து நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருகின்றன.
மாணவிகள் சறுக்குமரத்தில் விளையாடும்போது பாவாடை அணிவது வசதியாக இருக்காது என்பதால், சீருடையில் மாற்றம் கொண்டுவருவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
உள்கட்டமைப்பு
ஆசிரியர் கோரிக்கைகள்
பல ஆண்டுகளாக ஆசிரியர்கள் கோரிக்கைகளுக்காகப் போராடி வருவது வேதனையளிக்கிறது. பள்ளிகளுக்குக் கழிவறை பராமரிப்பு ஆட்கள் நியமனம் மற்றும் உலகத் தரத்திலான ‘ஸ்மார்ட்’ வகுப்பறைகளாக மாற்றுவது உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும் என்றார் அவர்.
