பஞ்சப் பாட்டு பாடும் கருநாடாகா! ஆனால், உண்மை நிலைமை வேறு!

2 Min Read

பெங்களூரு, ஆக.2 கருநாடக அணை களில் போதுமான அளவுக்கு நீர் இல்லை என்று பஞ்சப் பாட்டு பாடி, தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்துவிட அம்மாநில அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. ஆனால், கருநாடகாவின் கபினி அணை அடுத்த ஓரிரு நாட்களில் முழுக் கொள்ளவை எட்டும் நிலைக்குச் சென்றிருக்கிறது.

காவிரியின் குறுக்கே கருநாடகா அணைகளை கட்டியிருப்பதால் ஒவ்வோர் ஆண்டும் நமக்குத் தேவையான தண்ணீரைப் போராடித்தான் வாங்க வேண்டி இருக்கிறது. இந்நிலையில், இந்த ஆண்டும் கருநாடாக போதுமான அளவில் நீரைக் கொடுக்கவில்லை. வழக்கமாக ஜூன் 12 ஆம் தேதி யன்று திறக்கப்பட வேண்டிய நீர் திறந்துவிடப்படாத நிலையில், விவசாயிகள், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குரல் கொடுத்தும், போராடியும் வந்தனர்.

தண்ணீர் திறக்க உத்தரவு

அதன் பின்னர் விழித்துக் கொண்ட காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் ஆகியவற்றில் தமிழ்நாடு தன்னுடைய உரிமை குரலை எழுப்பியது. இதன் விளை வாக 4.5 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட வேண்டும் என்று இரண்டு அமைப்புகளும் வலி யுறுத்தியிருந்தன. இருப்பினும் கரு நாடக அணைகளுக்கு போது மான நீர் இல்லை என்று அம்மாநில முதல்வர் டி.கே.சிவகுமார் கூறியிருந்தார்.

கருநாடக அணைகளின் நிலவரம்

ஹாரங்கி (95%), கபினி (83%) ஹேமாவதி (67%) மற்றும் கே.ஆர்.எஸ்(36%) என அணைகளில் இவ்வளவுதான் தண்ணீர் இருக்கி றது. இது எங்கள் குடிநீர் மற்றும் இதர தேவைகளுக்குதான் தாங்கும். அதையும் திறந்துவிடச் சொல்றீங்களா? என்று கருநாடக மாநில முதலமைச்சர் சிவகுமார் கேட்டிருந்தார். ஆனால், தற்போதைய நிலவரப்படி கபினி அணை ஓரிரு நாட்களில் முழுக் கொள்ளவை எட்டும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.

கருணை காட்டி மழை

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரண மாக, கபினி, ஹேமாவதி அணை களுக்கான நீர்வரத்து அதி கரித்திருக்கிறது. கபினி அணையின் முழுக் கொள்ளவு 19.52 டிஎம்சி. ஹேமாவதி அணையின் கொள்ளவு 37.10 டிஎம்சி. கேரளாவின் வயநாடு, கருநாடாகவின் கூர்க் பகுதிகளில் கனமழை பெய்யும்போது இந்த அணைகளுக்கு நீர் வரத்து அதி கரிக்கும். எதிர்பார்த்தபடி வயநாடு பகுதியில் மழை வெளுத்து வாங்கு கிறது. எனவே, அணையின் நீர்மட்ட மும் வேகமாக நிரம்பி வருகிறது.

அணையைத் திறக்க வேண்டும்

இதன் காரணமாக விரைவில் அணையை திறக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். கபினி நீர், கருநாடாகவின் டி.நரசிபுரா பகுதி யில் காவிரியுடன் கலக்கிறது. அதன் பின்னர் அங்கிருந்து நேராக பிலிகுண்டு வந்து மேட்டூருக்கு வந்து சேர்கிறது. இந்த நீரை நம்பி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயி லாடுதுறை, திருச்சி, புதுக்கோட்டை மற்றும் கடலூர் மாவட்ட விவ சாயிகள் இருக்கின்றனர். மொத்தமா 12 லட்சம் ஏக்கர் இந்த நீரை நம்பி மட்டுமே இருக்கின்றன. வழக்கமாக ஜூன் 12 ஆம் தேதி குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து நீர் திறக்கப்படும். ஆனால், இந்த முறை கருநாடகா நீரை திறக்காததால் மேட்டூருக்கு போதுமான அளவுக்கு தண்ணீர் வரவில்லை.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *