வட சென்னை பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் ‘ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை’ நூல் அறிமுக விழா கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி ஆய்வுரை

திராவிடர் கழகம்

சென்னை, ஆக. 1- வட சென்னை பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை நூல் அறிமுக விழா 25.07.2026 அன்று மாலை 6.30 மணியளவில் அன் னை மணியம்மையார் அரங்கத்தில் சிறப்பாக  நடைபெற்றது.

மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் தலைவர் இரா.சண்முகநாதன் தலைமை ஏற்று நிகழ்ச்சியின் நோக்கத்தை விளக்கி உரையாற்றினார். நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரையும் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் செயலாளர் ஏஜஸ் உசைன்  வர வேற்று உரையாற்றினார்.

பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலப் பொதுச்செயலாளர்
ஆ. வெங்கடேசன், மாநில துணைத் தலைவர் வேல்.சோ.நெடுமாறன், திராவிடர் கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர் தே.செ.கோபால், மாவட்ட கழகத் தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன் ஆகியோர் முன்னிலை  வகித்தனர். பகுத்தறிவாளர் கழக மாநில அமைப் பாளர் கோவி.கோபால் தொடக்க உரையாற்றினார்.

‘ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை’ நூலின் ஆய்வுரையை திராவிடர் கழகப் பிரச்சார செய லாளர் வழக்குரைஞர் அருள்மொழி சிறப்பாக வழங்கினார்.

ஆர்.எஸ்.எஸ். எனும் ஆபத்தை தமிழ்நாட்டில் யாரும் உணரும் முன்பே பல்லாண்டுகளாக ஆசிரியரும், திராவிடர் கழகமும் வெளிச்சம் போட்டுக் காண்பித்ததை விளக்கினார். ஆர்.எஸ்.எஸ்.-அய்த் தடுக்கும் வகையில் நாம் எவ்வாறு செயல்படவேண்டும் என்பதையும், அதற்கு இந்த நூல் ஒரு ஆயுதமாக விளங்குவதையும் எடுத்துக் கூறினார்.

கூட்டத்தில் புதிய நண்பர்கள் பலரும் கலந்து கொண்டு நூல்களைப் பெற்றுக் கொண்டனர். உரையை கேட்டு தெளிவுபெற்றுப் பாராட்டினார்கள். நிறைவாக மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் பா.இராமு நன்றி கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *