
சென்னை, ஆக. 1- வட சென்னை பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை நூல் அறிமுக விழா 25.07.2026 அன்று மாலை 6.30 மணியளவில் அன் னை மணியம்மையார் அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது.
மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் தலைவர் இரா.சண்முகநாதன் தலைமை ஏற்று நிகழ்ச்சியின் நோக்கத்தை விளக்கி உரையாற்றினார். நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரையும் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் செயலாளர் ஏஜஸ் உசைன் வர வேற்று உரையாற்றினார்.
பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலப் பொதுச்செயலாளர்
ஆ. வெங்கடேசன், மாநில துணைத் தலைவர் வேல்.சோ.நெடுமாறன், திராவிடர் கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர் தே.செ.கோபால், மாவட்ட கழகத் தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பகுத்தறிவாளர் கழக மாநில அமைப் பாளர் கோவி.கோபால் தொடக்க உரையாற்றினார்.
‘ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை’ நூலின் ஆய்வுரையை திராவிடர் கழகப் பிரச்சார செய லாளர் வழக்குரைஞர் அருள்மொழி சிறப்பாக வழங்கினார்.
ஆர்.எஸ்.எஸ். எனும் ஆபத்தை தமிழ்நாட்டில் யாரும் உணரும் முன்பே பல்லாண்டுகளாக ஆசிரியரும், திராவிடர் கழகமும் வெளிச்சம் போட்டுக் காண்பித்ததை விளக்கினார். ஆர்.எஸ்.எஸ்.-அய்த் தடுக்கும் வகையில் நாம் எவ்வாறு செயல்படவேண்டும் என்பதையும், அதற்கு இந்த நூல் ஒரு ஆயுதமாக விளங்குவதையும் எடுத்துக் கூறினார்.
கூட்டத்தில் புதிய நண்பர்கள் பலரும் கலந்து கொண்டு நூல்களைப் பெற்றுக் கொண்டனர். உரையை கேட்டு தெளிவுபெற்றுப் பாராட்டினார்கள். நிறைவாக மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் பா.இராமு நன்றி கூறினார்.
