குடந்தை, ஆக. 1- குடந்தைக் கழக மாவட்ட திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் 26.7.2026 அன்று மாலை 05.30 மணியளவில் பாபநாசம் பட்டுக்கோட்டை அழகிரி மெட்ரிகுலேசன் மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், நிகழ்விற்கு தலைமையேற்று கூட்டத்தின் நோக்கங்களை விளக்கி. சிறப்புரையாற்றினார்.
மாவட்டத் தலைவர் கு. நிம்மதி, கடவுள் மறுப்புக் கூறி உரையாற்றினார்.
பாபநாசம் நகரத் தலை வர் வெ.இளங்கோவன் அனைவரை யும் வரவேற்று பேசினார்.
மாவட்டக் காப்பாளர் வை .இளங்கோவன், மாநில இளைஞ ரணிச் செயலாளர் நாத்திக.பொன்முடி, பகுத்தறிவாளர் கழக மாநில பொதுச் செயலாளர் வி.மோகன், பாபநாசம் ஒன்றியத் தலைவர் தங்க .பூவானந்தம், பாபநாசம் ஒன்றிய செயலாளர் சு.கலியமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் ஆ.தமிழ்மணி மாவட்ட ப.க அமைப்பாளர் க. திருஞானசம்பந்தம்,ஆகியோர் முன்னிலை ஏற்று உரை யாற்றினர்.
தொடர்ந்து மாவட்ட துணைத் தலைவர் வ.அழகுவேல், மாவட்டத் துணைச் செயலாளர் து.சரவணன், மாவட்ட மகளிர் அணி தலைவர் எம். திரிபுரசுந்தரி, குழந்தை ஒன்றிய தலைவர் கோ.வி.மகாலிங்கம், வலங்கை ஒன்றியத் தலைவர் க. பவானி சங்கர், குடந்தை மாநகரத் தலைவர் பேராசிரியர் க. சிவக்குமார், திருப்பனந்தாள் ஒன்றியச் செயலாளர் பட்டம் க. மோகன், மாவட்ட தொழிலாளர் அணித் தலைவர் த.ஜில்ராஜ், மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் பெரியார் கண்ணன், மாவட்ட தொழிலாளர் அணி துணைத் தலைவர் ந. சிவக்குமார், மாவட்ட தொழிலாளர் அணி துணைச்செயலாளர் அ.சங்கர், பகுத்தறிவாளர் கழக மாவட்டச் செயலாளர் ம. சேதுராமன், குடந்தை நகர இளைஞரணி தலைவர் க. ரியாஸ் அகமது, அய்யம்பேட்டை நகரத் தலைவர் வெ. இராவணன், அய்யம்பேட்டை நகரச் செயலாளர் வெ. அறிவழகன், பாபநாசம் ஒன்றியத் துணைத் தலைவர் கே. ராஜராஜன், பாபநாசம் நகர துணைத் தலைவர் க. ஜனார்த்தனன், குடந்தை மாநகரச் செயலாளர் குடந்தை காமராஜ், குடந்தை ஒன்றிய செயலாளர் அசூர் செல்வம், மகளிர் அணி எம். மாரியம்மாள், பாபநாசம் ஒன்றியம் உளம்பளப்பாடி சா. வரதராஜன், ஆ.சிவானந்தம் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்,
குடந்தை கழக மாவட்ட செயலாளர் சு.துரைராசு நிகழ்வினை ஒருங்கிணைத்து பேசினார். பாபநாசம் நகர செயலாளர் மு.வீரமணி, நன்றி கூறினார்
குடந்தை கழக மாவட்டம் திருப்பனந்தாள் ஒன்றிய துணைத் தலைவர் துகிலி சி.தமிழ்மணி, பகுத்தறிவாளர் கழக மாவட்டச் செயலாளர் மா.சேதுராமனின், தாயார் ஜெயலட்சுமி, குடந்தை பகுத்தறிவாளர் கழக மாவட்ட அமைப்பாளர் க.திருஞானசம்பந்தத்தின் இணைய விஜயராணி ஆகியோர் மறைவிற்கு இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கலையும் வீரவணக்கமும் செலுத்துகிறது.
ஜூலை-4 சேலத்தில் நடை பெற்ற கழகத் பொதுக்குழு தீர்மானங்களை ஏற்று செயல்படுத்துவது என தீர்மானிக்கப்படுகிறது.
நாகை மாவட்டம் கீழவெண்மணி கொடூரம் தொடர்பாக தந்தை பெரியார் வெளியிட்ட அறிக்கையும் கழகத் தோழர்களின் எதிர் வினையும் முழுமையாக உள்வாங்காமல் மேலோட்டமாக படித்துவிட்டு அரைவேக்காடுத்தனமாக. அபத்தமாக. மடத்தனமாக. பேசியுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன், அவர்களின் கருத்துக்கு குடந்தை மாவட்ட கழகம் வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.
“இந்தியாவில் கம்யூனிசம் பரவாமல் கம்யூனிஸ்டிகளே பார்த்துக் கொள்வார்கள்” என்று தந்தை பெரியார் சொன்னார் அதை இக் கூட்டம் கம்யூனிஸ்டுகளுக்கு ஞாபகப்படுத்துகிறது.
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, அவர்களின் அனு மதியுடன் விரைவில் உண்மை விளக்க கூட்டங்களை குடந்தை கழக மாவட்டத்திலும் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
பெரியார் பன்னாட்டு அமைப்பின் சார்பில் “சமூக நீதிக்கான வீரமணி” விருது பெரும் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், அவர்களுக்கு குடந்தை கழக மாவட்டம் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது.
தந்தை பெரியார் அவர்களின் (செப்டம்பர் 17) 148ஆவது பிறந்தநாள் மற்றும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, அவர்களின் {டிசம்பர் 2) 94ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு குடந்தை கழக மாவட்டம், நகர, ஒன்றியப் பகுதிகளில் சுவரெழுத்து விளம்பரங்களை செய்வது என தீர்மானிக்கப்பட்டது.
