சென்னை, ஜூலை 30– அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் சார்பில் மாணவர்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நாடுவோருக்கு கல்விச் சான்றிதழ்கள் மற்றும் தனிப்பட்ட ஆவணங்களுக்கான சான்றொப்பம் மற்றும் அங்கீகார சேவைகள் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் 29.7.2026 அன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசின் நிறுவனமான அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் (OMCL) சென்னை கிண்டியில் (தொழிற்பேட்டை பேருந்து நிலையம் அருகில்) ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத் தில் இயங்கி வருகிறது.
இந்நிறுவனம் வெளிநாட்டு வேலை வாய்ப்பு, உயர்கல்வி மற்றும் குடியேற்றம் தொடர்பான தேவைகளுக்காக கல்விச் சான்றி தழ்கள் மற்றும் தனிப்பட்ட ஆவணங் களுக்கான சான்றொப்பம் (Attestation) மற்றும் அங்கீகாரம் (Apostille) அளிக்கும் சேவைகளை மாணவர்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நாடுவோர்களுக்காக வழங்கி வருகிறது.
இதற்காக அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தை நேரடியாக அணுகும் விண்ணப்பதாரர்களுக்கு, ஒரு சான்றிதழுக்கு சான்றொப்பம் பெற ரூ.900-ம்- மற்றும் ஜிஎஸ்டி கட்டணம் 18 சதவீதம் மட்டும் பெறப்படுகிறது. பொதுமக்களின் நலனைப் பாதுகாக் கவும் நம்பகத்தன்மையுடனும், வெளிப்படையான முறையிலும் இச்சேவைகளைப் பெறுவதற்காக அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தை அணுகி பயன் பெறலாம்.
எனவே, சான்றொப்பம் மற்றும் அங்கீகாரம் வழங்கும் சேவைகளைப் பெற விரும்பும் மாணவர்கள், வெளிநாட்டு வேலை வாய்ப்பு நாடுவோர் மற்றும் பொது மக்கள், இடைத்தரகர்களைத் தவிர்த்து நேரடியாக அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தை அணுகி பயன்பெறலாம். கூடுதல் விவரங்களை www.omcmanpower.tn.gov.in என்ற இணையதளத்தில் அறியலாம். மேலும் 9566239685, 6379179200, 044-22502267 ஆகிய எண்களிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பெண்களுக்குத்
தேவையான எண்கள்
வீடு, அலுவலகம், பொது இடம், பேருந்து என அனைத்து இடங்களிலும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்வி குறியே. எனவே, பெண் மீதான வன்கொடுமை-181, ராகிங்-155222, பெண்கள் மற்றும் குழந்தைகள் காணாமல் போதல் -1094, குழந்தைகள் பாதுகாப்பு-1098, மன உளைச்சல் -9911599100, தேசிய பெண்கள் ஆணையம்-01126944754, 26942369, தமிழ்நாடு பெண்கள் ஆணையம்-044 28592750 என்ற எண்களை சேமித்து வைப்பது அவசியமானதாகும். தெரிந்த பெண்களுக்கு பகிரவும்!
