கீழ்வேளூர், ஜூலை 29- “நீட்” தேர்வையும் உயர்ஜாதியினருக்கான EWS இட ஒதுக்கீட்டையும் ரத்து செய்ய வலியுறுத்தி வருகை தரும் வாகனப்பரப்புரை குழுவினரை எழுச்சியுடன் வரவேற்று கூட்டத்தை சிறப்பாக நடத்திட நாகப்பட்டினம் மாவட்ட கலந்துரையாடலில் முடிவு செய்யப்பட்டது.
நாகப்பட்டினம் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் 26.7.20226 அன்று காலை 10.30 மணியளவில் கீழ்வேளூர்-(குருக்கத்தி) ஒன்றியத் தலைவர் பாவா.ஜெயக்குமார் இல்லத்தில் நடைபெற்றது.
திராவிட மாணவர் கழக மாவட்டத் தலைவர் மு.குட்டி மணி கடவுள் மறுப்பு கூறினார். கீழ்வேளூர் ஒன்றிய தலைவர் பாவா.ஜெயக்குமார், அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். மாவட்டத் தலைவர் வி.எஸ்.டி.ஏ. நெப்போலியன் தலைமை வகித்து உரையாற்றினார்.
மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், கூட்டத்தின் நோக்கங் களை விளக்கி, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் ஒவ்வொரு பொழுதும் நம்மை இயக்கிக் கொண்டு வருகிறார் என்றார். ஜூலை 4 சேலத்தில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத் தீர்மானங்களை விளக்கி விரைவில் கூட்டம் நடத்துவது, நடைபெற இருக்கின்ற இரு சக்கர வாகன பரப்புரை பயணம் சம்பந்தமாகவும், விடுதலை சந்தா சேர்த்தல், கழக பிரச்சார பணிகள் குறித்தும் நீண்ட நேரம் உரையாற்றினார்.
மாவட்ட செயலாளர் ஜெ. புபேஸ் குப்தா, மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் வி.கே.ஆர்.பெரியார் செல்வி, மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக.பொன்முடி, மாவட்ட துணைத் தலைவர் பொன். செல்வராசு ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர்.
பொதுக்குழு உறுப்பினர் ந.கமலம், நாகை நகர தலைவர் பொதுக்குழு உறுப்பினர் தெ.செந்தில்குமார், நாகை ஒன்றிய செயலாளர் குஞ்சுபாபு சின்னதுரை, கீழ்வேளூர் ஒன்றிய செயலாளர் க.பாக்யராஜ், நாகை நகர செயலாளர் சண்.ரவிக்குமார், கீழ்வேளூர் நகர செயலாளர் ம. முத்துராஜா, திருமருகல் ஒன்றிய துணைத் தலைவர் க.சின்னதுரை, கீழ்வேளூர் ஒன்றிய துணைத் தலைவர் அ.அரங்கராசு, கீழ்வேளூர் வட்டார விவசாய அணி செயலாளர் குருக்கத்தி தமிழ்ச்செல்வன், மாவட்ட இளைஞரணி தலைவர் வீ.ஆர். அறிவுமணி, மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் தங்க.கிருட்டிணன், மாவட்ட மகளிர் அணி தலைவர் பு.அலமேலு, மாவட்ட மகளிர் பாசறை தலைவர் செ.கவிதா, பெரியார் சமூக காப்பு அணி பயிற்றுநர் சென்னை காமராஜ், முன்னாள் மாவட்ட இணைச் செயலாளர் ரெ.துரைசாமி, நாகை யாகப்பா ஆகியோர் கருத்துக்களை தெரிவித்தனர்.
தீர்மானங்கள்
ஜூலை-4 சேலத்தில் நடைபெற்ற திராவிடர் கழக பொதுக்குழு தீர்மானங் களை ஏற்று செயல்படுத்துவது என தீர்மானிக்கப்படுகிறது.
“நீட்” EWS உயர்ஜாதிருக்கான இட ஒதுக்கீட்டை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி திராவிடர் கழக இளை ஞரணி, திராவிட மாணவர் கழகம், திராவிட மகளிர் பாசறை, சார்பில் தமிழ்நாடு புதுச்சேரி தழுவிய அளவில் நடைபெறும் இருசக்கர வாகன பரப்புரை பயண குழுவினரை நாகப்பட்டினம் மாவட்டத்தின் சார்பில் எழுச்சியுடன் வரவேற்று. கீழ்வேளூர், சிக்கல், நாகை மூன்று இடங்களிலும் பயண கூட்டங்களை சிறப்பாக நடத்துவதும் . அதற்கான விளம்பர பணிகளை உடனடியாக செய்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு கண்டனம்
நாகை மாவட்டம் கீழவெண்மணி கொடூரம் தொடர்பாக தந்தை பெரியார் வெளியிட்ட அறிக்கையையும் திராவிடர் கழகத் தோழர்களின் எதிர் வினையையும் முழுமையாக உள்வாங்காமல் மேலோட்டமாகப் படித்துவிட்டு, அரைவேக்காடுத்தனமாக, அபத்தமாக, மடத்தனமாக பேசியுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனின் கருத்துக்கு நாகை மாவட்ட திராவிடர் கழகம் வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது
“இந்தியாவில் கம்யூனிசம் பரவாமல் கம்யூனிஸ்டுகளே பார்த்துக் கொள்வார்கள்” என்று தந்தை பெரியார் சொன்னார். அதை இக்கூட்டம் கம்யூனிஸ்டுகளுக்கு ஞாபகப்படுத்துகிறது
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, அவர்களின் அனுமதியுடன் விரைவில் உண்மை விளக்க கூட்டங்களை கீழ் வேளூர் ஒன்றிய பகுதிகளில் நடத்துவது என முடிவு செய்யப்படுகிறது.
பெரியார் பன்னாட்டு அமைப்பின் சார்பில் “சமூக நீதிக்கான கி.வீரமணி” விருது பெறும் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், அவர்களுக்கு நாகை மாவட்டம் திராவிடர் கழகம் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது.
கீழ்வேளூர் பகுதியில் (ஆகஸ்ட் இறுதி வாரம் அல்லது செப்டம்பர் முதல் வாரத்தில்) ஒரு நாள் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை நடத்துவது என தீர்மானிக்கப்படுகிறது.
தந்தை பெரியார் அவர்களின் (செப்டம்பர் 17) 148ஆவது பிறந்தநாள், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, அவர்களின் {டிசம்பர் 2) 94ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நாகப்பட்டினம் மாவட்டம் , நகர, ஒன்றிய பகுதிகளில் சுவரெழுத்து விளம்பரங்களை செய்வது என தீர்மானிக்கப்படுகிறது.
புதிய பொறுப்பாளர்கள்
நாகை மாவட்ட இணைச் செயலாளர் ரெ.துரைசாமி, (கீழ்வேளூர்)
கீழையூர் ஒன்றிய தலைவர் ப.கோலிளிச் செல்வன், (திருக்குவளை)
கீழையூர் ஒன்றிய செயலாளர்
தங்கக்.கிருஷ்ணன், (எட்டுக்குடி)
நாகை ஒன்றிய துணைத் தலைவர் யாகப்பா, (சிக்கல்)
திருமருகல் ஒன்றிய இணைச் செயலாளர் நாக. ரவிச்சந்திரன், (கொட்டாரக்குடி)
