காவிரி விவகாரத்தில் கெஞ்சத் தேவையில்லை! தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன்

3 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

வேலூர், ஜூலை 28- உச்சநீதிமன்ற உத்தரவு இருக்கும்போது காவிரி விவகாரத்தில் கெஞ்சத் தேவையில்லை என்று திமுக பொதுச் செயலாளரும், முன்னாள் நீர்வளத் துறை அமைச்சருமான துரைமுருகன் தெரிவித் துள்ளார்.

வேலூர் மாவட்டம், காட்பாடியில் தனது இல்லத்தில் அவர் அளித்த பேட்டியில் தெரிவிப்பதாவது:

காவிரி தொடர்பான பிரச்சினைக்கு உச்சநீதி மன்றம் அல்லது காவிரி மேலாண்மை குழு அல்லது ஒழுங்காற்றுக் குழுவைத்தான் அணுக வேண்டும்.

நேரடியாக சென்று பேச்சுவார்த்தை நடத்தினால் உச்ச நீதிமன்றம் உத்தரவு வீணாகிவிடும். இவ்விவகாரத்தில் அனைத்துக் கட்சிகளை கூட்டி ஆலோசனை பெற்றிருக்க வேண்டும். என்ன நடக்கிறது என்பது முதலமைச்சர் சென்று வந்த பிறகுதான் தெரியும்.

எம்ஜிஆர் சென்று பேச்சுவார்த்தை நடத்திய காலம் என்பது நீதிமன்ற உத்தரவு இல்லாத காலம். உச்சநீதிமன்றம் உத்தரவு நம்மிடம் இருக்கும் போது நாம் போய் கெஞ்ச வேண்டிய அவசியம் இல்லை.

எந்த ஆட்சியாக இருந்தாலும் கடன் வாங் காமல் ஆட்சி நடத்த முடியாது. ஆனால் வாங்கிய கடனை என்ன செய்கிறார்கள் என்பதுதான் முக்கியம். மாணவர்கள் கிளர்ந்து எழுந்தால் ஆட்சி மாற்றம் தான் நடக்கும். வங்கதேசம் போன்ற நாடுகளிலும் அதுதான் நடந்துள்ளது என்றார்.

காவிரிப் பிரச்சினை:
ஒன்றிய பிஜேபி அரசின் இரட்டை நிலைப்பாடு!

புதுடில்லி, ஜூலை 28- ஒன்றிய அரசு, தற்போது அன்புமணி ராமதாசின் கேள்விக்கு காவிரி தீர்ப்பாயத்தின் பிரிவு 18அய் மேற்கோள் காட்டி, கருநாடகாவில் மேகதாது அணை கட்ட தமிழ்நாடு அரசின் அனுமதி தேவை என்று உச்சநீதிமன்ற தீர்ப்பில் கூறப்படவில்லை என்று கூறி உள்ளது. ஆனால் இதே ஒன்றிய அரசு கடந்த காலத்தில் கருநாடக அணை கட்ட தமிழ்நாடு அனுமதி தேவை என்றும் கூறியுள்ளது.

இது தொடர்பான அந்த ஆவணம் சமூகவலை தளத்தில் தற்போது பரவி வருகிறது. அதாவது கடந்த 2015ஆம் ஆண்டு ஜூன் மாதம் 9ஆம் தேதி அப்போதைய ஒன்றிய நீர்வள அமைச்சர் உமா பாரதி, நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக இருந்த அன்புமணி ராமதாசுக்கு, எழுதிய ஒரு கடிதத்தில், காவிரி தீர்ப்பாயத்தின் பிரிவு 13அய் சுட்டிக்காட்டியிருந்தார்.

அந்தப் பிரிவில், கருநாடகம் மற்றும் தமிழ்நாடு எல்லைப் பகுதியில் நீர்மின் திட்டங்கள் அமைக்கப்பட்டு, காவிரி நீர் நீர்த்தேக்கத்தில் சேமிக்கப் பட்டாலும், கீழப்பகுதிக்கு தண்ணீர் திறந்துவிடும் முறை தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு இணங்க இருக்க வேண்டும். பாசனத் தேவைகள் எந்த வகையிலும் பாதிக்கப்படக்கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், மேகதாது திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கையும் அந்தப் பிரிவின் அடிப்படையில் பரிசீலிக்கப்படும் என்று அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அன்று காவிரி தீர்ப்பாயத்தின் பிரிவு – 13அய் மேற்கோட்டிய ஒன்றிய அரசு, தற்போது அதே விவகாரத்தில் பிரிவு – 18அய் மேற்கோள் காட்டுவதாக அரசியல் வட்டாரத்தில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 

விரைவில் ஆணவப் படுகொலைக்கு

எதிராகத் தனிச்சட்டம்!

சமூகநீதி அமைச்சர் வன்னிஅரசு உறுதி

ஏரல், ஜூலை 28- தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த இளைஞர் கவின் ஆணவப்படுகொலை செய்யப்பட்டதன் முதலாமாண்டு நினைவு நாள் நிகழ்ச்சி, நேற்று (27.7.2026) அவரது இல்லத்தின் முன்பு நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் வன்னி அரசு பங்கேற்று, கவினின் உருவப்படத்தைத் திறந்து வைத்து, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து கவினின் தாய் தமிழ்ச்செல்வி, தந்தை சந்திரசேகர் ஆகியோருக்கு அவர் நேரில் ஆறுதல் கூறினார்.

முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ உள்ளிட்ட பலர் கவினின் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

ஆணவக் கொலைக்கு எதிரான சட்டம்!

நினைவேந்தல் நிகழ்வுக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் வன்னி அரசு பேசுகையில், “கவின் கொலை வழக்கு தொடர்பாகச் சட்டபூர்வமான நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஆணவப் படுகொலைகளுக்கு எதிராகத் தனிச்சட்டம் கொண்டு வருவதற்கான பணிகள் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான குழுவின் மூலம் நடைபெற்று வருகின்றன. தற்போது இது தொடர்பாக அரசு அதிகாரிகளிடம் விளக்கங்கள் கேட்கப்பட்டு வருகின்றன. விரைவில் இதற்கான முழு அறிக்கை தயாரிக்கப்பட்டு முதலமைச்சரிடம் சமர்ப்பிக்கப்படும்” என்று தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *