பரப்புரையில் நூறு இரு சக்கர வாகனங்கள் பழனி மாவட்டக் கழகம் முடிவு

1 Min Read

24-7-2026, வெள்ளி மாலை 5-30 மணியளவில் பழனி மாவட்ட திராவிடர் கழக அலுவலகத்தில் NEET &EWS நிரந்தரமாக ஒழிக்க கோரும் வாகன பரப்புரை வரவேற்ப்பு குறித்து கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.இதில் பழனி,  மானூர், கோரிக்கடவு பகுதியில் நடைபெறும் பரப்புரையில் நூறு இருசக்கர வாகனங்கள் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது. இது குறித்து விரிவான முறையில் விளம்பரம் செய்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது.மேலும் இந்நிகழ்வில் மாவட்டத் தலைவர் பி.ஆர்.பி ஆனந்தகிருட்டிணன், மாவட்டச் செயலாளர் பொன்.அருண்குமார், மாவட்ட இனைச்செயலாளர் ஆ.இராமகிருட்டிணன், மாவட்ட து.செயலாளர் ஆர்.பி.ஆணந்தன்,நகரச்செயலாளர் செந்தில், ப.க.மாவட்டத் தலைவர் திராவிடச் செல்வன், ச.பாலன், அமரபூண்டி பாலன், மாவட்ட து.தலைவர் மா.முருகன், சி.இராதாகிருட்டிணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு  உரையாற்றினர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *