ஒசூரில் 15ஆவது புத்தகத் திருவிழாவை மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் திறந்து வைத்தார். புத்தகத் திருவிழாவில் தந்தை பெரியார் சுயமரியாதைப் பிரச்சாரம் நிறுவனம் (கடை எண்: 71) பெரியார் புத்தகக் கடையை மாவட்ட ஆட்சியர் ச.தினேஷ்குமார் திறந்து வைத்தார்.அவருக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதிய “ஆர்.எஸ்.எஸ் என்னும் டிரோஜன் குதிரை” என்ற நூலை மாவட்ட தலைவர் சு.வனவேந்தன் வழங்கினார். உடன் பொதுக்குழு உறுப்பினர் கோ.கண்மணி, பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் சிவந்தி அருணாசலம், மாவட்ட துணைச் செயலாளர் ச.எழிலன், பெரியார் பெரும் தொண்டர் துரை இராவணன், புத்தக திருவிழா தலைவர் ஆர்.நீலகண்டன், துணைத்தலைவர் ஆர்.சிவகுமார், ஒருங்கிணைப்பாளர் முனைவர் எஸ்.ஆர்.சேதுராமன் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
