பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் இணைந்து தமிழர் தலைவர் கி.வீரமணி எழுதிய “ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை” நூல் அறிமுக விழா – கருத்தரங்கம் தமிழ்நாடெங்கும் எழுச்சியுடன் நடைபெற்றது. அதன் விவரம் வருமாறு:
திருப்பூர்
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதி கடந்த 2021ஆம் ஆண்டு வெளியான “ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை” என்ற நூலை அவசர அத்தியாவசியம் கருதி பொது மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் பகுத்தறிவாளர் கழகம் சார்பில் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து கழக மாவட்டங்களில் நடந்த நிகழ்வின் ஒரு பகுதியாக கடந்த 19.7.2026 அன்று மாலை 6 மணியளவில் திருப்பூர் தெற்கு ரோட்டரி சங்க அரங்கில் நூல் வெளியீட்டு விழா நடை பெற்றது.
நிகழ்வில், திருப்பூர் மாவட்ட ப.க. தலைவர் வே.இளங்கோவன் தலைமை தாங்கினார். திருப்பூர் மாநகர ப.க. தலைவர் நாக.சதாசிவம் அனைவரையும் வரவேற்றார். திருப்பூர் மாவட்ட கழக காப்பாளர் நளினம் நாகராஜ், தலைவர் யாழ்.ஆறுச்சாமி, செயலாளர் பெ.செல்வராஜ், திருப்பூர் மாநகர செயலாளர் தி.வீரமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினரும், திருப்பூர் மாவட்ட ப.க. செயலாளருமான மு.நாச்சிமுத்து நூலை வெளியிட்டு உரையாற்றினார். திருப்பூர் மாநகராட்சி மேயர் (பொ) இரா.பாலசுப்பிரமணியம், மருத்துவர் சு.முத்துசாமி ஆகியோர் நூலைப் பெற்றுக் கொண்டு உரையாற்றினர். வழக்குரைஞர் ஏ.வி.விவேகானந்தம் (திமுக), கு.சோழன் (ஆதித் தமிழர் பேரவை), பல்லடம் நகர கழக அமைப்பாளர் குணசேகர், பல்லடம் மு.சண்முகசுந்தரம் (திமுக), முத்தூர் ச.சிவக்குமார், அம்மாபாளையம் கணேசன், துரைமுருகன் ஆகியோர் நூலைப் பெற்றுக் கொண்டனர். திருப்பூர் மாவட்ட ப.க. அமைப்பாளர் மு.துரைசாமி துவக்கவுரையாற்றினார்.
நிகழ்வில் நூல் அறிமுகவுரையாற்றிய திராவிட மாணவர் கழக மாநில துணை செயலாளர் தே.நர்மதா பேசியதாவது:
தந்தை பெரியார் அவர்களின் அயராத பிரச்சாரத்தால் தான் தமிழ்நாட்டில் பார்ப்பனர்களின் வேலை எடுபடவில்லை. ஆரியத்திற்கு எதிராக முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் குரல் எழுப்பினார். மும்மொழி திட்டத்தை தமிழ்நாடு ஏற்றுக் கொள்ளாது என்று முத்துவேல் கருணாநிதி, ஸ்டாலின் அவர்கள் மாநில உரிமைக்கு குரல் எழுப்பினார். 93 வயதில் இன்றளவும் ஆரியத்திற்கு முடிவுரை எழுதும் தலைவராக தமிழர் தலைவர் அவர்கள் உள்ளார்.
இந்த புத்தகத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பல்வேறு வேடங்களை பற்றி தமிழர் தலைவர் அவர்கள் கூறியுள்ளார். ட்ராய் நகரோடு கிரேக்கம் போரிடுகிறது. வெல்ல முடியவில்லை! அதனால் தந்திரமாக குதிரை பொம்மைக்குள் போர் வீரர்களை இறக்கி அந்த பொம்மையை ட்ராய் நகருக்கு கிரேக்கம் பரிசளிக்கிறது. ட்ராம் நகருக்கு சென்ற குதிரை பொம்மையில் இருந்த போர் வீரர்கள் ட்ராய் நகரை அழித்து விடுகிறார்கள். இதுதான் டிரோஜன் என்பது! தந்திரத்தால் வெல்வது! இலியட் இதிகாசத்தில் வரும் டிரோஜன் குதிரையை போன்றது தான் ஆர்.எஸ்.எஸ்.! நேரடியாக மோதாமல், சூழ்ச்சியால் வெல்ல முயலும் கூட்டம்!
இந்த நூல் வெளிவந்து 4 ஆண்டுகள் ஆகிறது. ஆனால், பள்ளி மாணவர்களிடையே உளவு ரீதியாக பண்பாட்டு படையெடுப்பு தற்பொழுது நடத்தப்படுவதால் இந்த நூலை பொதுமக்களிடையே கொண்டு செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இந்து ராஷ்ட்டிரா என்பதன் பொருள் என்ன? ஒரே மொழி! ஒரே மதம்! என்பது தான். இதை கோட்பாடாக ஏற்றுக் கொண்டுள்ள ஆர்.எஸ்.எஸ். ஒரே ஜாதி என்பதை தனது கோட்பாடாக ஏற்றுக் கொள்ளுமா? என்று கேட்பது தான் திராவிட இயக்கம்!
கடவுளுக்கு, மனிதனுக்கு சேவை செய்கிறோம் என்பார்கள்! அனைத்தும் பொய்! எல்லா நாடுகளிலும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு உள்ளது! பொதுமக்ளுக்கான சேவை என்ற பெயரில் பணம் வசூல் செய்யப்பட்டு, பார்ப்பன வளர்ச்சி பயன்பாடுகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. ஒரு மாநிலத்தில் வெவ்வேறு வகையில் பிரச்சினைகளை கிளப்புவார்கள். யோகா என்ற நோக்கத்தில் பிற மதங்களின் மீது வெறுப்பை வளர்ப்பார்கள். மாற்றத்தை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்! உடையில் கூட பழமை வாதத்தை மாற்றாமல் இருப்பது தான் அவர்களது தத்துவம்!
கடவுள் நம்பிக்கையாளர்களே, ஆர்.எஸ்.எஸ்.-அய் புரிந்து வைத்துள்ளது தான் வியப்பு! ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் குறிப்பாக, சீர்திருத்தவாதிகளை இருட்டடிப்பு செய்வார்கள். யாருக்கெல்லாம் மனிதநேயம் இருக்கிறதோ, அவர்கள் அனைவரும் வாங்கி படிக்க வேண்டிய புத்தகம் இது! இவ்வாறு அவர் உரை நிகழ்த்தினார்.
நிகழ்வில் பல்வேறு அமைப்பினர்கள், பொதுவுடைமை சிந்தனையாளர்கள் திரளாக பங்கேற்றனர். கூட்ட முடிவில், கழகத் தோழர் வெள்ளகோயில் ச.மணிகண்டன் நன்றி கூறினார்.
கும்பகோணம்
கும்பகோணம் கழக மாவட்ட பகுத்தறி வாளர் கழகம், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் இணைந்து நடத்திய தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி எழுதிய எழுதிய “ஆர்.எஸ்.எஸ். என்னும் ட்ரோஜன் குதிரை” நூல் அறிமுகக் கூட்டம் 19.07.2026 அன்று மாலை 6.30 மணிக்கு கும்பகோணம் பெரியார் மாளிகையில் நடை பெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் ஆடிட்டர் சு.சண்முகம் தலைமை ஏற்றார். வருகை தந்த அனைவரையும் கும்பகோணம் பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர் செல்வரசன் வரவேற்றுப் பேசினார்.

கூட்டத்திற்கு மாவட்ட கழகத் தலைவர் கு.நிம்மதி, பொதுக்குழு உறுப்பினர் தமிழ்மணி ஆறுமுகம், காப்பாளர் வை.இளங்கோவன், மேனாள் தஞ்சை தமிழ் பல்கலைக்கழக பேராசிரியர் உ.பிரபாகரன், மாவட்டச் செயலாளர் சு.துரைராசு, மாவட்ட வழக்குரைஞர் அணி அமைப்பாளர் பீ.ரமேஷ், ஓய்வு பெற்ற பேராசிரியர் ஜி.பாலசுப்ரமணியன், குடந்தை மாவட்ட தமுஎசக தமிழ்ச்செல்வி, அச்சுவெல்லம், இலக்கிய அமைப்பு விஜய் ஆரோக்கியராஜ், தஞ்சை மாவட்ட திமுக ஐடி விங்க் ஆர்.சுமதி, திராவிடர் கழக தொழிலாளர் அணி அ.சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தொடக்க உரையை மாநில பகுத்தறிவாளர் கழக பொதுச்செயலாளர் வி.மோகன் மற்றும பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநில துணைச் செயலாளர் ம.சேதுராமன் வழங்கினர். தொடர்ந்து நூலை அறிமுகம் செய்து சிறப்புரையாற்றிய வழக்குரைஞர் பூவை புலிகேசி, தனது எளிமையான நடையில் இந்நூலின் கருத்துகளை ஒவ்வொரு அத்தியாயமாக எடுத்துரைத்தார். பல்வேறு நூல்களில் இருந்து ஆசிரியர் எடுத்துக்காட்டிய ஆதாரங்களை அந்த நூல்களைக் கொண்டு எடுத்துக்காட்டி பேசினார்.
தொடந்து பார்வையாளர்கள் நூலினை பணம் கொடுத்து வாங்கிக் கொண்டார்கள். நிகழ்வில் பெண்கள் அதிகம் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. இறுதியில் பேராசிரியர் க.சிவக்குமார் நன்றி கூறினார்.
கூட்டத்தில் தமிழ் அறிஞர் வய்.மு. கும்பலிங்கன், கல்வியாளர் இளஞ்சேட் சென்னி, விடுதலை சிறுத்தைகள் கட்சி பொறுப்பாளர் செல்வராஜ், கல்வியாளர் மு.சேகர், பாபநாசம் ஒன்றிய கழகத் தலைவர் பூவானந்தம், செயலாளர் சு.கலியமூர்த்தி, திருவிடைமருதூர் ஒன்றியத் தலைவர் எம்.என்.கணேசன், மகளிர் அணி பொறுப்பாளர்கள் திரிபுரசுந்தரி, அம்பிகா, குடந்தை மகாலிங்கம், மாவட்ட கழக பொறுப்பாளர் நெடுந்தெரு சரவணன் மற்றும் பல மகளிரணித் தோழர்களும், பல்வேறு அமைப்புகளில் இருந்து தோழர்களும் கலந்து கொண்டனர்.
பட்டுக்கோட்டை
பட்டுக்கோட்டை கழக மாவட்டம் சார்பில் பட்டுக்கோட்டை நகர திமுக அலுவலகத்தில் 18.07.2026 அன்று மாலை 6:45 மணியளவில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களால் எழுதப்பட்ட ஆர். எஸ். எஸ் எனும் டிரோஜன் குதிரை நூல் திறனாய்வும், மற்றும் புத்தக வெளியீட்டு விழாவும் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பட்டுக்கோட்டை மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் அ.இரத்தினசபாபதி தலைமை ஏற்றார். மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் வழக்குரைஞர் புலவஞ்சி இரா. காமராஜ் வரவேற்புரையுடனும் மேனாள் பகுத்தறிவாளர் கழக மாவட்ட செயலாளர் அழகப்பா பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் கரு.கிருட்டினமூர்த்தி, பட்டுக்கோட்டை ஒன்றிய பகுத்தறிவாளர் கழகத் தலைவர் இள. குமணன், மதுக்கூர் ஒன்றிய பகுத்தறிவாளர் கழகத் தலைவர் ம.சிவஞானம், பேராவூரணி ஒன்றிய பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர் கனக. இராமச்சந்திரன் இவர்கள் முன்னிலையிலும் நடைபெற்ற நிகழ்வில் கழக சொற்பொழிவாளர், சிதம்பரம் மாவட்ட கழக தலைவர் பேராசிரியர் பூ.சி.இளங்கோவன் முதல் நூலினை வெளியிட பட்டுக்கோட்டை திமுக நகரச் செயலாளர் எஸ்.என்.ஆர்.செந்தில்குமார் முதல் புத்தகத்தை பெற்றுக் கொண்டார்.

‘ஆர்எஸ்எஸ் எனும் டிரோஜன் குதிரை’ புத்தகத்தை திறனாய்வு செய்து பேராசிரியர் பூ.சி.இளங்கோவன், பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் சி.இரமேஷ், பகுத்தறிவாளர் கழக மாநில ஊடக பிரிவுத் தலைவர் மா.அழகிரிசாமி, மாவட்ட கழகத் தலைவர் மல்லிகை வை. சிதம்பரம், மாவட்டக் காப்பாளர் அத்திவெட்டி பெ.வீரையன், ஆகியோர் உரையாற்றினார்.
புத்தக திறனாய்வு மற்றும் வெளியீட்டு விழாவில் மாவட்டச் செயலாளர் கா.தென்னவன், முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் அ.காளிதாசன், கழக பொதுக்குழு உறுப்பினர்கள் பேராவூரணி இரா. நீலகண்டன், முத்து துரைராஜ், மாவட்ட துணைச் செயலாளர் சோம.நீலகண்டன், பட்டுக்கோட்டை நகர கழகத் தலைவர் சு.அரவிந்த் குமார், மதுக்கூர் ஒன்றிய கழகத் தலைவர் புலவஞ்சி பெ.அண்ணாதுரை, பட்டுக் கோட்டை ஒன்றிய செயலாளர் சி.ரெங்க சாமி, பேராவூரணி ஒன்றிய கழக செயலாளர் அ.பாலசுப்பிரமணியன், பட்டுக்கோட்டை நகர செயலாளர் மா.குமரவேல், பகுத்தறிவாளர் கழக நகரச் செயலாளர் ம.வள்ளுவப்பெரியார், மண்டலகோட்டை சரவணன், நெம்மேலி நவீனா, உள்பட ஏராளமான தோழர்கள் கலந்து கொண்டனர்.
மாவட்ட பகுத்தறிவாளர் கழக மேனாள் செயலாளர் பேராசிரியர் முனைவர் கரு.கிருட்டினமூர்த்தி நன்றி கூறினார். புத்தக வெளியீட்டு விழாவில் 50 புத்தகங்களும் விற்பனை செய்து முடிக்கப்பட்டது.
திமுக நகரச் செயலாளர் செந்தில்குமார் மேலும் தனக்கு 50 புத்தகங்கள் வேண்டுமென அறிவிப்பு செய்தார். புத்தகத்தை வெளியிட்ட பேராசிரியர் இளங்கோவன் அவர்களுக்கும் புத்தகத்தைப் பெற்றுக் கொண்ட திமுக நகரச் செயலாளர் செந்தில்குமார் அவர்களுக்கும் நகர திராவிடர் கழகத் தலைவர் சு.அரவிந்த் குமார் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார்.
ஆத்தூர்
ஆத்தூர் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பாக தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதிய ஆர்.எஸ்.எஸ் எனும் டிரோஜன் குதிரை என்னும் நூல் அறிமுக விழா 19.07.2026 அன்று மதியம் 11 மணியளவில் தலைவாசல் அரிமா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வ.முருகானந்தம் மாவட்டத் தலைவர் பகுத்தறிவாளர் கழகம் தலைமை தாங்கி தலைமை உரையாற்றினார்.
வரவேற்புரை முனைவர் கு. பிரகாஷ் நகரத் தலைவர் பகுத்தறிவாளர் கழகம் வரவேற்புரை ஆற்றினார். முன்னிலை வகித்த அ.சுரேஷ் மாவட்டத் தலைவர், நீ.சேகர் மாவட்டச் செயலாளர், ரா.விடு தலைச் சந்திரன் மாவட்டக் காப்பாளர், அண்ணா துரை மாவட்ட நகரத் தலைவர், பெ.முரளி நகரச் செயலாளர் பகுத்தறிவாளர் கழகம், ரா.சுரேஷ் மாணவர் கழகம், செ.விக்னேஷ் இளைஞர் அணி, ஆகியோர்கள் முன்னிலை வகித்து முன்னிலை உரையாற்றினர்.

இரா.மாயக்கண்ணன் மாநில அமைப்பாளர் பகுத்தறிவாளர் கழகம் தொடக்க உரையாற்றினார். அண்ணா சரவணன் மாநில துணைப் பொதுச் செயலாளர் பகுத்தறிவாளர் கழகம் நூல் அறிமுக உரையாற்றினார் அதில் ஆர்எஸ்எஸ் என்னும் டிரோஜன் குதிரை என்ற என்ற நூலில் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் 13 தலைப்பாக பிரித்து இந்த நூலை இயற்றியுள்ளார் ஹிந்து தர்மம் என்பது வர்ணம் ஜாதியைப் பாதுகாக்க ஏற்படுத்தப்பட்டது. தர்மத்திற்கு பதிலாக நாம் அறத்தை பின்பற்றுகிறோம், அறமே சிறந்தது என்றும், ஹிந்து ஒற்றுமை என்பது பார்ப்பன மேல ஆதிக்கத்தை நோக்கமாகக் கொண்டது. ஹிந்து என்று அனைத்து மக்களையும் வரவழைக்க மட்டுமே அவர்கள் பயன்படுத்தி கொள்வார்களே தவிர அனைத்து மக்களுக்குமான சமூக நீதியை அவர்கள் ஒருபோதும் ஆதரிப்பதே இல்லை. விவேகானந்தர் முற்போக்கு பிம்பம் என்பதும் கூட ஜாதி ஒழிப்பிலோ அவருக்கு அக்கறை இல்லை, ஸநாதனத்தை காப்பதிலே அவருடைய அக்கறை இருந்தது. சுதேசி என்பது இவர்களுடைய பார்ப்பனிய பனியா கூட்டு கம்பெனிகள் வளர்வதற்காகவே, சுதேசி பொருட்களை வாங்க வேண்டும் என்பது இவர்கள் எடுத்த ஒரு முடிவு. நாம் எல்லோரும் இந்துக்கள் என்று சொல்வார்கள் ஆனால் ஒரு பொழுதும் இவர்கள் சாதி பாகுபாடுகளைப் பற்றியும் தீண்டாமை பற்றியும் இந்து மதத்தில் இருக்கக்கூடிய இந்த பிரிவினைழப் பற்றியும் எதிர்ப்பதும் கிடையாது, அதை திருத்த வேண்டும் என்கிற அக்கறையும் அவர்களுக்கு கிடையாது.அவர்கள் வளர்வதற்காக எல்லோரும் இந்துக்கள் என்று சொல்லிக் கொள்வார்கள் இதை தான் புரட்சியாளர் டாக்டர் பாபாசாகிப் அம்பேத்கர் அவர்கள் ஆர் எஸ் எஸ் அணியும் புதிய முகமூடிகளாக குறிப்பிடுகிறார்.
ஆர்எஸ்எஸ் இயக்கம் நானும் ஒரு ஓபிசி என்று ஓட்டு வேட்டைக்காக மட்டுமே தன்னை காட்டிக் கொள்ளுமே ஒழிய இந்த ஓ.பி.சி. மக்களுக்காகவும் கல்விக்காகவும் இட ஒதுக்கீட்டிற்க்காகவும் ஒருபோதும் தன் ஆதரவையோ போராட்டங்களோ நடத்தி ஓ.பி.சி. மக்களுக்கான நன்மையை செய்ததே இல்லை, செய்யாது இவருடைய தேச பக்தி என்பது மாநிலங்களின் ஆட்சியை ஒழித்து ஒரே நாடு என்கிற அந்த ஒற்றை ஆட்சி முறையை கொண்டு வருவதற்காகவே தேசபக்தி என்கிற மாயை ஏற்படுத்தி சங்பரிவார் கூட்டங்களின் அராஜகத்தை கட்டவிழ்கிறார்கள், மொழி என்று வருகிற பொழுது அவரவர்களுடைய தாய் மொழிக்கு முக்கியத்துவம் தராமல் ஒரே நாடு ஒரே மொழி என்று ஹிந்தி நுழைப்பதும் சமஸ்கிருதத்தை வளர்ப்பதுமே இவளுடைய வேலையாக இருக்கிறது. சேவை மனப்பான்மை என்பது ஆர் எஸ் எஸ் சேரும் அனைவரையும் சேவை செய்ய வைக்கிறோம் என்று இவர்கள் சொல்வார்களே ஒழிய அது ஒரு மாயை ஹிந்துத்துவா வெறியை கொஞ்சம் கொஞ்சமாக நஞ்சை சேர்ப்பது போல் சேர்த்து ஊட்டுவதே அவர்கள் பணியாக அந்த சேவையில் வைப்பார்கள் ஸநாதனத்தை காக்கிறோம் என்பது பயங்கரவாத செயல்களை இவர்கள் மறைமுகமாக ஆதரிப்பதற்காக பயங்கரவாத செயல்களை ஊக்குவிப்பதாக ஸநாதான காப்பு போர்வையில் ஒளிந்து கொள்கிறார்கள் இந்து ராஷ்டிரம் என்கிற பயங்கரவாத வலைப் பின்னலின் மூலம் இந்தியாவை ஒரே நாடு ஒரே மொழி ஒரே மதம் என்கிற அந்த ஒற்றைப் போர்வைக்குள் கொண்டு வந்து நிறுத்துவதற்கு இந்த ஆர்எஸ்எஸ் இயக்கம் முனைகிறது. ஒருபோதும் அது நமக்கு நன்மை தராது.டிரோஜன் குதிரையில் எப்படி மறைமுகமாக கிரேக்க வீரர்கள் வந்து அழித்தார்களோ அதே போன்று இந்தியாவை அழிக்க வந்திருக்கிற ஒரு இயக்கம் ஆர்எஸ்எஸ் இயக்கம் அவர்களுக்கு பிடிக்காத இரண்டு சொல் சமூக நீதியும் சமத்துவமும், அந்த சமூக நீதியும் சமத்துவத்தையும் நிலைநாட்டுவோம் அவை எடுத்துக் கூறும் காலகட்டத்தில் இருக்கிறோம் என்று தெளிவாக விளக்கினார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ‘ஆர்.எஸ்.எஸ். எனும் டிரோஜன் குதிரை’ நூலினை பெற்றுக்கொண்ட அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி தமிழ் துறைத் தலைவர் முனைவர் மு.முருகேசன், இணைப் பேராசிரியர் அய்.அம்பேத்கர், வழக்குரைஞர் கோவிந்தன், வழக்குரைஞர் த.செல்வராஜ், அ.முத்துக்குமரன், பெ.கோபிநாத், மெய்யன், ந.பொ. செந்தில்குமார், சத்தியமூர்த்தி, க.மணிகண்டன், பவுத்த பெரியசாமி தி.மு.க இளைஞர் அணி ராஜ்குமார், பெ.காளிதாஸ், ரா.துரை அ.அருள்பிரகாஷ், மு.ஆனந்தகுமார், அபிஷேக்,பூபாலன், அ.உதயநிதி ஆகியோர்கள் நூலினை பெற்றுக் கொண்டார்கள். இந்த நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டு சிறப்புத்தார்கள். நிகழ்ச்சியின் நிறைவாக கா. பெரியசாமி மாவட்ட அமைப்பாளர் பகுத்தறிவாளர்கள் கழகம் நன்றியுரை ஆற்றினார்.
