பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் இணைந்து தமிழ்நாடெங்கும் எழுச்சியுடன் நடைபெற்ற தமிழர் தலைவர் கி.வீரமணி எழுதிய “ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை” நூல் அறிமுக விழா – கருத்தரங்கம் நடை பெற்றது. அதன் விவரம் வருமாறு:
கிருட்டினகிரி
கிருட்டினகிரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் 19/07/2026 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணியளவில் கிருட்டினகிரி பெரியார் மய்யம் அன்னை மணியம் மையார் கூட்டரங்கில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதிய “ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை” நூல் அறிமுக விழா- அரங்கக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு கிருட்டினகிரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் ச.கிருட்டினன் தலைமை வகித்தார்.

மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் க.வெங்கடேசன் அனைவரையும் வரவேற்றார்.
இந்நிகழ்ச்சிக்கு கிருட்டினகிரி மாவட்ட கழகத் தலைவர் கோ.திராவிடமணி, மாவட் டச் செயலாளர் செ.பொன்முடி, மாநில மகளிரணி துணைச் செயலாளர் மு. இந்திரா காந்தி, மாவட்டத் துணைத் தலைவர் வ. ஆறுமுகம், மாவட்டத் துணைச் செயலாளர் சி.சீனிவாசன், மாவட்ட மகளிர் பாசறை தலைவர் மா.சிவசக்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பகுத்தறிவாளர் கழக மாநில அமைப் பாளர் முனைவர் காஞ்சி பா.கதிரவன் கலந்துகொண்டு “ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை” நூலினை வெளியிட்டு அறிமுகவுரையாற்றினார்.
அவர் பேசியதாவது:, ஆர்.எஸ். எஸ். அமைப்பு என்பது சமூக சேவை அமைப்பு என்ற போர்வையில் மக்களுக்கு பல்வேறு தீமைகளை செய்து வரக்கூடிய இயக்கம்தான் ஆர்.எஸ்.எஸ். மக்களை ஜாதி மதத்தால் பிளவுப்படுத்தக் கொடிய இயக்கம்தான் இவை. இந்தி (சமஸ்கிருத) திணிப்பை மய்யப்படுத்தி மற்ற மொழிகளை அழிக்கவேண்டும் என்ற தீய எண்ணங்கள் கொண்டவைதான் ஆர்.எஸ்.எஸ். இந்திய நாட்டில் சுமார் 25 ஆயிரம் பேர் கூட பேசாத ஒரு மொழி சமஸ்கிருதம் இம் மொழியை தேவபாசை என்றும் உலகெங்கும் பேசும் தமிழ்மொழியை நீசபாசை என்றும் கூறுகின்றனர் பார்ப்பனர்கள் மற்றும் ஆர்.எஸ்.எஸ். சங்பரிவார் அமைப்புகள் வன்முறையை நோக்கமாக கொண்டவை குறித்து பல்வேறு செய்திகளையும், ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை மற்றும் ஆர்.எஸ்.எஸ்.ஒரு அபாயம் என்ற நூலிலிருந்தும் ஆர்.எஸ்.எஸ்.சின் முகமுடிகளை விளக்கி தெளிவாக எடுத்துக் கூறி கருத்துரையாற்றினார்.
இந் நிகழ்ச்சியில் மாநில பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற துணைத் தலைவர் ம.கவிதா பேசியதுதாவது சுயமரியாதை இயக்கமும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் கம்யூனிஸ்ட் அமைப்பும் ஒரே காலத்தில் 1925-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அமைப்புகள்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ஜாதி, இந்து (மதவெறி) மதத்தையும் பாதுகாக்கும் மற்றும் பெண் உரிமைகளையும் சமூகநீதியையும் மறுக்கும் இந்து மதவெறி இயக்கம் தான். ஆர்.எஸ்.எஸ். சமூகசேவை என்ற பெயரில் மக்களை ஜாதி மதத்தால் பிளவுப்படுத்துகிறது. ஆர்.எஸ்.எஸ். இந்துமதவெறியை தூண்டுகிறது என பல்வேறு கருத்துகளை இரத்தினச் சுருக்கமாக தனது தொடக்கவுரையில் எடுத்துக் கூறி சிறப்பாக பதிவு செய்தார்.
மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் இராம.சகாதேவன் இணைப்புரை வழங்கினார்.

நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர்கள் கி.முருகேசன், இல. ஆறுமுகம், மேனாள் மாவட்டத் தலைவர் பெ.மதிமணியன், மாவட்ட இளைஞரணிச் செயலாளர் நா.சிலம்பரசன், துணைச் செயலாளர் பூ. இராசேந்திரபாபு, மாவட்ட மாணவர் கழகச் தலைவர் இர.அஜய்குமார், நகரச் செயலாளர் அ.கோ.இராசா, காவேரிப்பட்டணம் ஒன்றியத் தலைவர் பெ.செல்வம், ஒன்றியச் செயலாளர் பெ.செல்வேந்திரன், கிருட்டினகிரி ஒன்றியத் தலைவர் த.மாது, பெரியார்கொள்கையாளர் இரபிக் அகமது, ஊற்றங்கரை ஒன்றிய துணைத் தலைவர் காரப்பட்டு ப.இரமேசு, வேப்பனப்பள்ளி ப.க.நிர்வாகி ஆர்.எம்.ஜெயின், ஆ.ஆல்பிரட் அய்ன்ஸ்டீன், மாணவர் கழக மா.ரூபிகாசிறீ, பெரியார் பிஞ்சுகள் கா.ஆ.நிறை தமிழ், கா.ஆ.நிறை கதிர் உள்பட கழகத் தோழர்கள் திரளாகக் கலந்துக்கொண்டனர்.
நிறைவாக மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் மு.வேடியப்பன் நன்றி கூறினார்.
கோவை – சுந்தராபுரம்
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதிய “ஆர்.எஸ்.எஸ் என்னும் டிரோஜன் குதிரை” நூல் அறிமுக விழா – கருத்தரங்கம் 19.07.2026 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணியளவில் கோவை, சுந்தராபுரம் கண்ணப்பன் அரங்கில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு கோவை மாவட்ட பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் பெ.சின்னசாமி நூல் வெளியீட்டு விழாவின் அவசியம் குறித்து பேசினார்.
மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலா ளர் அக்ரி.நாகராசு வரவேற்புரை ஆற்றினார்.

இவ்விழாவிற்கு கோவை மாவட்டத் தலைவர் மா.சந்திரசேகர், மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் ஆ.பிரபாகரன், மாநகரத் தலைவர் செந்தில்நாதன், பொதுக்குழு உறுப்பினர் பழ.அன்பரசு, மாவட்ட மகளிரணித் தலைவர் செ.முத்துமணி, மாநில மாணவர் கழகு துணைசெயலாளர் மு.இராகுலன் ஆகியோர் முன்னிலை வகித்து கருத்துரையாற்றினார்கள்.
பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் தரும.வீரமணி “ஆர்.எஸ்.எஸ் என்னும் டிரோஜன் குதிரை” என்ற நூலின் தலைப்பானது நூலிலுள்ள கருத்துகளை அறியவேண்டும் என்கிற எண்ணத்தை தூண்டுகிறது என்று தனது தொடக்க உரையில் குறிப்பிட்டார்.
தொடக்க உரைக்கு பின்னர் திராவிட மாணவர் கழக மாநில இணைச்செயலாளர் மு.இளமாறன் புத்தகத்திலுள்ள 13 அத்தியாயங்களையும் ஆய்வு செய்து அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் விளக்கிக் கூறி, டிரோஜன் குதிரை வடிவத்தில் நாடு முழுவதும் ஊடுருவும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைப் பற்றி மக்கள் மத்தியில் பரப்புரை மேற்கொள்வதற்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களால் எழுதப்பட்ட “ஆர்.எஸ்.எஸ் என்னும் டிரோஜன் குதிரை ” நூலினை பெருமளவில் அனைத்து தரப்பு மக்களிடையே கொண்டுபோய் சேர்த்து விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும் எனவும் மிகவும் சிறப்பானதொரு உரையினையினை நிகத்தினார்.
இவ்விழாவிற்கு சிறப்பு அழைப் பாளர்களாக மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணைசெயலாளர் ஆடிட்டர் மா.ஆனந்தராசு, மாவட்ட மாணவர் கழகத் தலைவர் த.க.கவுதமன், இரா.கணேசன், ப.அருணாச்சலம், வழக்குரைஞர் சே.குணசேகரன், ச.திலகமணி, பி.பாக்கியம், முத்துமலையப்பன், ஆ.வசந்த், இரா.முத்து கணேசன், மா.இரமேஷ் ஆகிய தோழர்கள் கலந்துகொண்டனர்.
நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட தோழர்கள் அனைவரும் புத்தகம் பெற்றுகொள்வதற்கான நன்கொடை வழங்கினார்கள்.பகுத்தறிவாளர் கழக மாவட்ட அமைப்பாளர் எட்டிமடை நா.மருதமுத்து நன்றியுரை ஆற்றினார்.
அரியலூர்
அரியலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் மற்றும் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் இணைந்து தமிழர் தலைவர் ஆசிரியர் கி .வீரமணி அவர்கள் எழுதிய “ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை” நூல் அறிமுக விழா நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தினர்.
அரியலூர்-செந்துறை புறவழிச் சாலையில் அமைந்துள்ள கோவை கிருஷ்ணா சிற்றரங்கில் 19.7.2026 அன்று மாலை 6.30 மணி யளவில் தொடங்கி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ப.க.தலைவர் பெ.நடராஜன் தலைமை ஏற்க, ஆசிரியர் அ.வீரமணி வரவேற்புரையாற்றினார். மாவட்டத் தலைவர் விடுதலை நீலமேகன், மாவட்டச் செயலாளர் மு.கோபாலகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர் இரத்தின. ராமச்சந்திரன், மாவட்ட தொழிலாளரணித் தலைவர் தா.மதியழகன், மாவட்டத் துணைச் செயலாளர் க.கார்த்திக், மாவட்ட வழக்குரைஞரணி அமைப்பாளர் மு.ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில ப.க. அமைப்பாளர் தங்க சிவமூர்த்தி தொடக்க உரையாற்றினார்.
நூலினை வெளியிட்டு திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் தமிழர் தலைவரின் எழுத்தாற்றலை சுட்டிக்காட்டி கருத்துரையாற்றினார். மாநில ப.க. ஊடக பிரிவு தலைவர் மா .அழகிரி சாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் க.சிந்தனைச்செல்வன் ஆகியோர் உரையாற்றிய பின்னர் பேராசிரியர் இ.வளனறிவு நூலினை பற்றி சிறப்பாக ஆய்வு செய்துஅறிமுக உரை நிகழ்த்தினார்.
மாவட்ட ப.க. செயலாளர் மு.ஜெயராஜ் நன்றி கூறினார். நூல்களை தோழர்கள் பெற்றுக்கொள்ள அனைத்தும் விற்று தீர்ந்தது. அறுபதாம் பிறந்தநாள் காணும் பொதுக்குழு உறுப்பினர் இரத்தின.இராமச்சந்திரன், கலைச்செம்மல் விருது பெற்ற செந்துறை தா.மதியழகன், பணி நிறைவு பெற்ற ஆசிரியர்கள் பெரம்பலூர் மாவட்ட ப.க.தலைவர் பெ. நடராஜன் தா.பழூர் – நடுவலூர் அருமைக்கண்ணு கருப்பையன் ஆகியோருக்கு சிறப்பு செய்யப்பட்டது
அரியலூர் ஒன்றிய தலைவர் சி.சிவக் கொழுந்து, மாவட்ட ஆசிரியரணி அமைப் பாளர் வி.சிவசக்தி, மாவட்ட இளைஞரணித் தலைவர் லெ.தமிழரசன், தமிழ் தேசிய முன்னணி பெ.பாரி வள்ளல்,செந்துறை ஒன்றியத் தலைவர் மு.முத்தமிழ் செல்வன், மாவட்ட விவசாய அணிச் செயலாளர் ஆ. இளவழகன், கீழப்பழுவூர் கே.எம்.அன்பரசன், திருமானூர் ஒன்றிய தலைவர்க. சிற்றரசு, ஒன்றிய செயலாளர் பெ.கோபிநாதன், நகர தலைவர் சு.சேகர், ஆண்டிமடம் மு.அறிவின், அரியலூர் அரங்கநாடன், வெங்கட கிருஷ்ணாபுரம் மு. மருதமுத்து, ஓய்வுபெற்ற சுகாதார ஆய்வாளர் கோ.பச்சமுத்து மணப்பத்தூர் பூ கலைமணி, ஆண்டிமடம் நகர செயலாளர் டி.எஸ்.கே. அண்ணாமலை, அரியலூர் ஒன்றிய செயலாளர் த.செந்தில், செந்துறை ஒன்றிய செயலாளர் ராசா செல்வகுமார், தஞ்சாவூர், வெ.துரை, அருள்மணி, ஆண்டிமடம் ஒன்றியத் தலைவர், தியாக..முருகன், அரியலூர் நகரச் செயலாளர் ஆட்டோ தர்மா உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
விழுப்புரம்
விழுப்புரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில்திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி எழுதிய ஆர். எஸ்.எஸ். என்னும் டிரோஜன்குதிரை நூல் அறிமுக கருத்தரங்க விழா விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயம் தளபதி அரங்கத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு விழுப்புரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் தலைவர் துரை. திருநாவுக்கரசு தலைமை தாங்கினார் .திராவிடர் கழகத்தின் மாவட்டத் தலைவர் கோபன்னா, மாவட்டச் செயலாளர் அரங்க பரணிதரன், காப்பாளர் பூங்கான், பொதுக்குழு உறுப்பினர் சக்கரவர்த்தி, மாவட்டத் துணைச் செயலாளர் ரமேஷ், மாவட்ட பகுத்தறிவு கழகத் துணைச் செயலாளர் பாரதி, விழுப்புரம் நகர கழக தலைவர் ராஜேந்திரன், செயலாளர் சதீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பகுத்தறிவு கழகச் செயலாளர் தொல்காப்பியன் அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் பெரியார் செல்வம் தொடக்க உரை நிகழ்த்தினார். திராவிடர் கழக மாநில பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திர சேகரன் நூல்அறிமுக உரை நிகழ்த்தினார்.
நிகழ்ச்சியில் பழங்குடி மக்கள் முன்னணியின் நிறுவனர் சுடரொளி சுந்தரம், விழுப்புரம் நகர திமுக செயலாளர் சர்க்கரை, மத்திய மாவட்ட மாணவர் கழக துணை அமைப்பாளர் லெனின் விஜய், மாவட்ட திராவிடர் கழக மகளிர் அணிதலைவர் ஜெகதீஸ்வரி, மகளிர் அணி அமைப்பாளர் கீதா, இளைஞர் அணிச் செயலாளர் கவுதமன், கண்டாச்சிபுரம் நகர கழக தலைவர் நாகராஜன், முகையூர் ஒன்றியச் செயலாளர் அன்பரசன், நல்ல பாளையம் கிளைக் கழக தலைவர் கலையரசன், கோலியனூர் ஒன்றிய அமைப்பாளர் இராதாமணாளன், வல்லம் ஒன்றிய பகுத்தறிவு கழகம் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட திராவிடர் கழகம் மற்றும் பகுத்தறிவாளர் கழக நிர்வாகிகள்உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் கவுதமன் அனைவருக்கும் நன்றி கூறினார்.
