சபரிமலை கோயிலில் தங்கம் மோசடி தேவசம் போர்டு முன்னாள் தலைவர் கைது!

1 Min Read

திருவனந்தபுரம், ஜூலை 24 சபரிமலை தங்கக் கவச முறை கேடு விவகாரம் தொடா்பாக திருவி தாங்கூா் தேவஸ்வம் வாரியத்தின் (டிடிபி) முன்னாள் தலைவா் பி.எஸ்.பிரசாந்தை சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் (எஸ்அய்டி) நேறறு (23.7.2026) கைது செய்தனா்.

சபரிமலை அய்யப்பன் கோயில் கருவறைக் கதவுகள் மற்றும் துவார பாலகா் சிலைகளின் தங்கக் கவசங்களில் முறைகேடு செய்யப் பட்டதாக எழுந்த புகாரில் கடந்த ஆண்டு இரு வழக்குகளைப் பதிவு செய்து, சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்அய்டி) விசாரித்து வருகிறது.

இந்த விவகாரம் தொடா்பாக ஏற்கெனவே 12 பேரை சிறப்புப் புலனாய்வுக் குழு கைது செய்துள்ளது.

இந்நிலையில், கடந்த 2025-ஆம் ஆண்டு டிடிபி தலைவராக பிர சாந்த் இருந்தபோது, மின் முலாம் பூசிய பணிகள் தொடா்பாக விசாரித்து வருவதாகவும் கேரள உயா்நீதிமன்றத்தில் அக்குழு அண்மையில் தெரிவித்தது.

இதைத் தொடா்ந்து பிர சாந்தை காவலில் எடுத்து விசாரித் தனர். பின்னா் அவா் கைது செய்யப் பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

கடந்த 2023 முதல் 2025 வரை திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரித்தின் தலைவராக இருந்த பி.எஸ்.பிரசாந்த் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைவதற்கு முன் காங்கிரஸில் இருந்தார்.

சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள் அழைத்துச் செல்லும் முன் பிரசாந்த் வெளியிட்ட முகநூல் பதிவில், ‘எப்போது வேண்டு மானாலும் கைது செய்யப்படலாம் என எங்களுக்குத் தகவல் கிடைத் தது. இதற்குப் பின்னணியில் அரசி யல் அழுத்தம் இருப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கிறேன்.

கடந்த 2019-ஆம் ஆண்டில் நிகழ்ந்த தங்கக் கவச முறைகேடு விவகாரத்தை வெளிக்கொண்டு வருவதில் நான் முக்கியப் பங்காற்றினேன். இவ்வாறு இருக்கையில் முறைகேட்டுக்கு துணைபோனவா்களைப் பாது காக்க சிறப்பப் புலனாய்வுக் குழு அனுமதியின்றி கடந்த 2025-ஆம் ஆண்டில் பராமரிப்புக்காக துவார பாலகா் சிலைகளை எடுத்துச் சென்றாகக் கூறப்படும் குற்றச் சாட்டுகள் ஆதாரமற்றவை.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *