நாமக்கல் வை.நடராஜன் மறைவு கழகத் தோழர்கள் இறுதி மரியாதை மருத்துவக் கல்லூரிக்கு உடற்கொடையாக அளிப்பு

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

நாமக்கல், ஜூலை 23–  நாமக்கல் மாவட்ட திராவிடர் கழக மேனாள் தலைவர், பெரியார் பெருந்தொண்டர் வை.நடராஜன் (வயது 92) அவர்கள் முடிவெய்தினார். அவரது உடல் நாமக்கல் மருத்துவக் கல்லூரிக்கு காலை 10.00 மணிக்கு (21.7.2026) அன்று வழங்கப்பட்டது.

அவரது இறுதி ஊர்வலத்தில் பெரியார் பெருந் தொண்டர் பொத்தனூர் க.சண்முகம், தொழிலாளர் அணி மாநில துணைத் தலைவர் வீர.முருகன், நாமக்கல் மாவட்ட நிர்வாகிகள் வை.பெரியசாமி, அசேன், மாநில பொதுக்குழு உறுப்பினர் இல.ப.செல்வ குமார், திருச்செங்கோடு மாவட்டக் காப்பாளர் அ.கு.குமார், மாவட்டத் தலைவர் சு.சரவணன், மாவட்டச் செயலாளர் ஆனந்தகுமார் கணேசன், பகுத்தறிவாளர் கழக மாவட்டச் செயலாளர் மருத.அறிவாயுதம், பரமத்தி செங்கோடன், க..ச.செங்குட்டுவன். வழக்குரைஞர் அப்துல் கலாம் மற்றும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் வீரவணக்கம் செலுத்தினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *