பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் முஸ்லிம்களுக்கான உள் இடஒதுக்கீட்டை மறுப்பதா? பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. கண்டனம்!

3 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

சென்னை, ஜூலை 23- “பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் முஸ்லிம்களுக் கான உள் இடஒதுக்கீட்டை மறுப்பதா?” என்று மனித நேய மக்கள் கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம்.எச். ஜவாஹி ருல்லா எம்.எல்.ஏ. கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத் துள்ள அறிக்கை வருமாறு:-

பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் எம்.எஸ்.சி. மருத்துவ இயற்பியல் (M.Sc. Medical Physics) படிப்பில் பிற படுத்தப்பட்ட முஸ்லிம்களுக் கான (BCM) 3.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்று வரும் தகவல் பெரும் அதிர்ச் சியையும் கவலையையும் ஏற் படுத்தியுள்ளது. இது குறித்து பல்கலைக்கழக ஆசிரியர் கழகம் (AUT) கடும் கண்டனம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு சமூகநீதியின் கோட்டையாக விளங்குவதற்குக் காரணம், அரசியலமைப்புச் சட்டத்தின் 15(4), 15(5), 16(4), 46 ஆகிய பிரிவுகளின் அடிப்படை யில் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் பின்தங்கிய சமூகங் களுக்கு உரிய இட ஒதுக்கீட்டை உறுதியாக நடைமுறைப்படுத்தி வருவ தால் தான். அந்தக் கொள் கையின் ஒரு பகுதியாகவே பிறபடுத்தப்பட்ட முஸ்லிம் களுக்கு 3.5 சதவீத உள் இட ஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது.

இநிலையில், மாணவர்களிட மிருந்து விண்ணப்பங்களைப் பெற்று, நுழைவுத் தேர்வும் நடத்திவிட்டு, இறுதியிள் “பிசிஎம் பிரிவிற்கு இடம் இல்லை” என்று கூறி சேர்க்கையை மறுத்ததாக வெளிவந்துள்ள தகவல்கள் உண்மையாக இருந்தால், அது சட்டத்தின் ஆட்சியையும் சமூகநீதியையும் அலட்சியப் படுத்தும் செயலாகும்.

11 இடங்கள் மட்டுமே உள்ள பாடப் பிரிவாக இருந்தா லும், அரசின் 200 புள்ளி இட ஒதுக்கீட்டு ரோஸ்டர் முறையின்படி சுழற்சி அடிப்படையில் அனைத்து இடஒதுக்கீட்டுப் பிரிவுகளுக்கும் உரிய ஆண்டுகளில் வாய்ப்பு வழங்கப் பட வேண்டும் என்பதே நடைமுறையாகும். SC (அருந்ததியர்) உள்ளிட்ட பிற உள் இட ஒதுக்கீடுகள் கடைபிடிக்கப்படும் நிலையில், பிசிஎம் உள் இடஒதுக் கீடு மட்டும் புறக்கணிக்கப்பட்டுள் ளது மிகுந்த கவலைக்குரியது.

இந்த விவகாரம் ஒரு மாணவனின் சேர்க்கைப் பிரச்சினை மட்டுமல்ல; தமிழ்நாடு பல தசாப்தங்காடப் பாதுகாத்து வரும் சமூகநீதிக் கொள்கை முறையாகப் பின்பற்றப்படுகிறதா என்ற அடிப்படைக் கேள்வியை எழுப்புகிறது.

எனவே, முதலமைச்சர் அவர்களும், உயர்கல்வித் துறை அமைச்சரும் இவ்விவ காரத்தில் உடனடியாக தலையிட்டு:- பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் இடஒதுக்கீட்டு விதிமுறைகள் மற்றும் 200 புள்ளி ரோஸ்டர் முறையாகப் பின்பற்றப்பட்டதா என்பதை உயர்மட்டவிசாரணைக்கு உட்படுத்த வேண்டும்.

பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் களுக்கான உள் இடஒதுக்கீடு மறுக்கப்பட்டடிருப்பது உறுதியாகும் பட்சத்தில், பாதிக்கப்பட்ட மாணவருக்கு உடனடியாக உரிய சேர்க்கை வழங்கப்பட வேண்டும்.

மாநிலத்தின் அனைத்து பல்கலைக்கழகங்கள் மற் றும் அரசு உதவி பெறும் உயர்கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டு விதிமுறை கள், குறிப்பாக உள் இடஒ துக்கீட்டு நடைமுறைகள், தவறாமல் பின்பற்றப்படு வதை உறுதி செய்ய சிறப்பு கண்காணிப்பு அமைப்பை உருவாக்க வேண்டும்.

சமூகநீதிக் கொள்கையை மீறும் எந்த அதிகாரி அல்லது நிர்வாகத்தின் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சமூகநீதி என்பது தமிழ் நாட்டின் அரசியல் பண் பாட்டின் உயிர்நாடி. அந்த அடிப்படை விழுமியத்தை எந்த நிர்வாகக் காரணத்தாளும்கூட, அலட்சியத்தாலும், தவறான விளக்கத்தாலும் பாதிக்க அனுமதிக்க முடியாது. பிற படுத்தப்பட்ட முஸ்லிம்கள் உட்பட அனைத்து ஒடுக்கப் பட்ட சமூகங்களின் அரசியல மைப்புச் சட்ட உரிமைமை யையும் பாதுகாக்க மனித நேய மக்கள் கட்சி தொடர்ந்து குரல் கொடுக்கும்.

இவ்வாறு அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *