டில்லியில் மாணவர்கள் போராட்டத்தை திசை திருப்ப முடியாமல் தவிப்பு!

1 Min Read

தனது தந்திரங்களால் ‘எதையும்’ சாதித்து வந்த ஒன்றிய பா.ஜ.க. மோடி அரசுக்கு
12 ஆண்டுகளில் முதல் மற்றும் மிகப்பெரிய அடி!

புதுடில்லி, ஜூலை 23 ஒன்றியத்தில், 2014 இல் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சியைப் பிடித்ததிலிருந்து, இந்திய அரசியலின் போக்கையும், மக்களின் சிந்தனையையும் தங்களுக்குச் சாதகமாகத் திருப்புவதில் தங்களது தந்திரங்களைப் பயன்படுத்தி அதனை சாதித்து வந்தது. ஆனால் முதல்முறையாக பா.ஜ.க. அப்படி செய்ய முடியாமல் தோல்வி முகம் கண்டுள்ளது.

கடந்த 12 ஆண்டுகளில் எத்தகைய பெரும் எதிர்ப்புகள் கிளம்பினாலும், தங்களின் தந்திர வியூகங்களால் அதைத் தகர்த்து, இறுதியில் அரசியல் ரீதியாக வெற்றி பெறுவது பாஜகவின் வழக்கமான பாணியாக இருந்தது.

விவசாயிகளை…

பஞ்சாப் விவசாயிகள் டில்லியை முற்றுகையிட்டபோது, அவர்களை ‘‘காலிஸ்தானிகள்’’ என்றும் ‘‘தேசவிரோதிகள்’’ என்றும் அடையாளப்படுத்தி, மற்ற மக்களின் ஆதரவைப் பெற்றது.

குடியுரிமைத் திருத்த சட்டத்திற்கு எதிராக..

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக ஷாஹீன் பாக்கில் போராட்டங்கள் வெடித்தபோது, அதை முஸ்லிம்களின் போராட்டம், பாகிஸ்தான் ஆதரவு என முத்திரைக் குத்தி தங்களுக்குச் சாதகமாக மாற்றிக் கொண்டது ஒன்றிய பா.ஜ.க. மோடி அரசு.

மணிப்பூர் போராட்டக்காரர்களை..

மணிப்பூர் போராட்டம் கூட ‘சீனாவின் பண்டிங்’ என்று பா.ஜ.க. பிரச்சாரம் செய்தது. எதுவாக இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் மீதோ அல்லது பிரிவினைவாத சாயலிலோ பழியைப் போட்டு, மக்கள் மனநிலையைத் திசைதிருப்புவது அவர்களின் முக்கிய ஆயுதமாக இருந்தது.

பா.ஜ.க.வின் தந்திர வியூகம் தோல்வி

ஆனால், வரலாற்றில் முதன்முறை யாக அந்தப் பிரச்சார தந்திர வியூகம் சுக்குநூறாக உடைந்து போயிருக்கிறது!

டில்லியில் சிஜேபி (Cockroach Janta Party) மற்றும் பல்வேறு மாணவர் அமைப்புகள் இணைந்து நடத்தி வரும் பிரம்மாண்ட போராட்டம், பா.ஜ.க.வின் 12 ஆண்டுகால தோற்கடிக்க முடியாத பிம்பத்திற்கு விழுந்த முதல் மற்றும் மிகப்பெரிய அடியாகும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *