ஆவடி,ஜூலை.22. ஆவடி மாவட்டத்தில், “ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை” புத்தகம் அறிமுக விழா நடைபெற்றது. இதில் திராவிடர் கழகத்தின் பொருளாளர் வீ.குமரேசன் கலந்துகொண்டு புத்தகத்தை வெளியிட்டு, ’காந்தியை படுகொலை செய்த நாதுராம் கோட்சே ஆர்.எஸ்.எஸ்.காரர்தான்’ என்று அவரது சகோதரர் கோபால் கோட்சே சிறையிலிருந்து விடுதலையாகி வந்து ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்ததைச் சுட்டிக்காட்டி உரையாற்றினார்.
கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களின் வழிகாட்டுதலில் தமிழ்நாடு முழுவதுமாக, ”ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை” புத்தக அறிமுக விழாக்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வரிசையில், ஆவடி மாவட்டம் சார்பில், காமராஜர் சாலையில் இருக்கும் பெரியார் மாளிகையில், 19.07.2026, மாலை 5:30 மணிக்கு, மேற்குறிப்பிட்டுள்ள, புத்தக அறிமுக விழா நடைபெற்றது. மாவட்டத் தலைவர் வெ.கார்வேந்தன் தலைமையேற்று உரையாற்றினார். தோழர் வை.கலையரசன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். பகுத்தறிவாளர் கழக மாநிலப் பொதுச்செயலாளர் ஆ.வெங்கடேசன் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து உரையாற்றினார். மாநில ஒருங்கிணைப்பாளர் வி.பன்னீர்செல்வம் முன்னிலை வகித்து உரையாற்றினார். தொடர்ந்து கழகத்தின் பொருளாளர் வீ.குமரேசன் புத்தகத்தை வெளியிட, முதல் பிரதியை தி.மு.க. தலைமைக் கழகப் பேச்சாளர் ஆவடி கா.மு.ஜான் பெற்றுக்கொண்டார். கழகக் காப்பாளர் ஆவடி பா.தென்னரசு, மாவட்டச் செயலாளர் க.இளவரசன், மாவட்டத் துணைச்செயலாளர் பூவை தமிழ்ச்செல்வன், பகுத்தறிவாளர் கழகத் தோழர் ஆவடி செங்குட்டுவன், பூவிருந்தவள்ளி நகர கழகச் செயலாளர் தி.மணிமாறன், திருநின்றவூர் நகரச் செயலாளர் கீதா இராமதுரை, ஆவடி நகர கழகத் தலைவர் கோ.முருகன் ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்பித்தனர். நிறைவாக கழகப் பொருளாளர் ஆய்வுரையை வழங்கினார்.
பண்பாட்டின் அடையாளம்
கழகப் பொருளாளர் தமது உரையில், பகுத்தறிவாளர் கழகம், திராவிடர் கழகம் பற்றி சில முக்கிய தகவல்களையும், ’திராவிடர்’ என்ற சொல்லை, பெரியார் மொழி அடையாளமாகவோ, இன அடையாளமாகவோ பயன்படுத்தாமல் பண்பாட்டு அடையாளமாகவே பயன்படுத்தினார் என்றும், சுயமரியாதை இயக்கத்தின் கொள்கைகள் என்பது தமிழ்நாட்டுக்கு மட்டுமன்று, இந்தியாவுக்கு மட்டுமன்று, உலகத்திற்கே பயன்படக்கூடிய ஒன்று என்று பெரியார் குறிப்பிட்டுள்ளார் என்பன போன்ற அடிப்படையான சில விசயங்களை தொடக்கத்தில் பகிர்ந்துகொண்டார். தொடர்ந்து, இந்திய சமூகத்தில் நிலவும் வர்ணாஸ்மரக் கொள்கையை எடுத்தாண்டு, எல்லாம் தமக்கே என்றிருக்கும் பார்ப்பனர்களை பெரும்பானமை மக்கள் எதிர்த்துவிடக் கூடாது என்பதற்காகவே ஜாதி அமைப்பு உருவாக்கப்பட்டு, நம்மை தனித்தனியாக பிரித்து வைத்தனர். இவை அனைத்தும் பார்ப்பன மேலாதிக்கத்திற்காக உருவாக்கப்பட்டது. அதைத் தக்க வைப்பதற்காக உருவானதுதான் ஆர்.எஸ்.எஸ். எனும் அமைப்பு என்று விளக்கினார்.
ஆர்.எஸ்.எஸ்.-சின் இயல்பு
மேலும் அவர், “ஆர்.எஸ்.எஸ். அமைப்பு அதன் செயல் திட்டத்தில், தங்களுக்கு ஏதாவது சாதகமாக நடந்துவிட்டால் அதை ஏற்பதும், பாதகமாக நடந்துவிட்டால், அதற்கும் எங்களுக்கும் தொடர்பே இல்லை என்று கைவிட்டுவிடுவதும். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் இயல்பு என்று அதன் சூழ்ச்சியை அம்பலப்படுத்தினார். அப்படித்தான் காந்தியைப் படுகொலை செய்ய திட்டமிட்ட ஆர்.எஸ்.எஸ்., அதில் இருந்த நாதுராம் கோட்சேவை, ஆர்.எஸ்.எஸ். அமைப்பை விட்டு விலகச் செய்து, பின்னர் அதை நிறைவேற்றியவுடன், ’கோட்சே எங்கள் அமைப்பில் இல்லை’ என்று அறிவித்ததையும், ஆயுள் தண்டனை முடிந்து, விடுதலையான நாதுராம் கோட்சேவின் சகோதரர் கோபால் கோட்சே பத்திரிகையாளர் சந்திப்பில், நானும், எனது சகோதரரும் ஆர்.எஸ்.எஸ்.சில்தான் இருந்தோம் என்று உணமையை போட்டுடைத்துவிட்டதையும் எடுத்துரைத்ததையும் தரவுகளுடன் தமதுரையை நிறைவு செய்தார்.
பெரியார் மாணாக்கனுக்கு
பாராட்டு விழா
பாராட்டு விழா
நிறைவாக அரசு பேருந்து ஓட்டுநராக இருந்து ஓய்வு பெற்ற க.ச.பெரியார் மாணாக்கனுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. கழகப் பொருளாளர், வீ.குமரேசன், மாநில ஒருங்கிணைப்பாளர் வி.பன்னீர்செல்வம், அம்பத்தூர் இராமலிங்கம், திராவிட மணி ஆகியோர் பெரியார் மாணாக்கனுக்கு பயனாடை அணிவித்து பாராட்டிப் பேசினர். கழகப் பொருளாளர் பெரியார் மாணாக்கன், செல்வி, தொண்டறம் ஆகிய மூவருக்கும் சேர்த்து பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார். ஆவடி மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் ஜெயராமன் நிறைவாக நன்றி கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார். நிகழ்ச்சியை மாவட்டத் தலைவர் வெ.கார்வேந்தன் ஒருங்கிணைத்தார். முன்னதாக, ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை மற்றும் ஆர்.எஸ்.எஸ். பற்றி ஆகிய இரண்டு புத்தகங்களும் தள்ளுபடி விலையில் ரூ.140 க்கு வழங்கப்பட்டன. பகுத்தறிவாளர் கழகத் தோழர் கி.மு.திராவிடமணி, பட்டாபிராம் கழகத் தலைவர் இரா.வேல்முருகன், பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் செந்தில்குமாரி, கழக மாணவர் கழக மாநில துணைச் செயலாளர் செ.பெ.தொண்டறம் உள்ளிட்டோர் புத்தகங்களைப் பெற்றுக்கொண்டனர்.
நிகழ்வில் ச.சுரேஷ், தா.பார்த்திபன், கவின், புருசோத்தமன், சா.ச.சென்ன கிருட்டினன், மு.செல்வி, சி.வச்சிரவேல், உடுமலை வடிவேல் பிரசாந்த், பெரியார் பெருந்தொண்டர் அ.வெ.நடராசன், ரவிச்சந்திரன், அரி கிருட்டிணன், இன்பமணி, மாறன், யுவராஜ், குப்புசாமி, ப.வெங்கடேசன், பிரசாந்த், விஜய், பெரியார் பிஞ்சுகள் தருண், வருண் ஆகியோர் கலந்துகொண்டனர்.
வேலூர் – குடியேற்றம்

வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதிய “ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை” மற்றும் “ஆர்.எஸ்.எஸ். பற்றி” ஆகிய இரு நூல்களின் அறிமுக விழா குடியேற்றம் பெரியார் அரங்கில் நேற்று மாலை நடைபெற்றது.
விழாவில் வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் மருத்துவர் பழ.ஜெகன்பாபு எழுச்சிமிகு தலைமை உரையாற்றினார். வேலூர் மாநகர ப.க. தலைவர் கே.எஸ்.அஸ்ரப் வரவேற்புரை ஆற்றினார்.
பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் இரா.அன்பரசன் தொடக்க உரையாற்றி, ஆர்.எஸ்.எஸ் மற்றும் பி.ஜே.பி.யின் பிற்போக்கு செயல்களால் நாடு சந்தித்த பாதிப்புகள் குறித்து பேசினார்.
வேலூர் மாவட்ட ப.க. செயலாளர் முனைவர் வே.வினாயகமூர்த்தி அறிமுக உரையில் ட்ரோஜன் குதிரையின் வரலாற்றை விளக்கினார்.
திமுக தலைமைக் கழக சொற்பொழி வாளர் த.பாரி சிறப்புரையாற்றினார். ஆர்.எஸ்.எஸ். பிற்போக்கு செயல்களுக்கு திராவிட இயக்கங்கள் ஆற்றிய எதிர்வினைகள் குறித்து அவர் பேசினார்.
விழாவின் முக்கிய நிகழ்வாக, கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர் வழக்குரைஞர் க.குமாரதேவன், “ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை” மற்றும் “ஆர்.எஸ்.எஸ். பற்றி” நூல்களை அறிமுகப்படுத்தி உரையாற்றினார். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தீய நோக்கம், வருணாசிரம வெறி, தீண்டாமை, சமூக நீதிக்கு எதிரான போக்கு, சமஸ்கிருத மேலாதிக்கம், வன்முறை ஆகியவை குறித்து ஆதாரங்களுடன் விளக்கினார்.
கழக மகளிரணி மாநில துணைச் செயலாளர் ந.தேன்மொழி, மாவட்ட கழகத் தலைவர் வி.இ.சிவக்குமார், கழகக் காப்பாளர் வி.சடகோபன், நகர மன்ற உறுப்பினர் த.புவியரசி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நகர கழகத் தலைவர் சி.சாந்தகுமார் புரட்சிப் பாடல்கள் பாடினார். நகர ப.க. தலைவர் ப.ஜீவானந்தம் இணைப்புரை வழங்கினார்.
விழாவில் மாவட்ட கழகச் செயலாளர் இ.தமிழ்தரணி, பொதுக்குழு உறுப்பினர் சி.லதா, மாவட்ட மகளிர் பாசறைத் தலைவர் ச.இரம்யா, மகளிர் அணி ச.ஈஸ்வரி, பொதுக்குழு உறுப்பினர் உ.விஸ்வநாதன், மாவட்ட கழக துணைச் செயலாளர் மு.சீனிவாசன், நகர கழக அமைப்பாளர் வி.மோகன், மாவட்ட துணைச் செயலாளர் கா.பரமசிவம், வெ.ரா.நபீஸ் அகமது, மு.பிரகாசம், ரேடியோ ராஜேந்திரன், ந.ஜம்புலிங்கம், நகர திமுக துணைச் செயலாளர், இரா.முத்துக்குமார், திமுக இலக்கிய அணி, ம.ஜ.சந்தீப், திமுக இளம் பேச்சாளர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழா முடிவில் வேலூர் மாவட்ட ப.க. துணைத் தலைவர் பி.தனபால் நன்றி கூறினார்.
இந்தக் கூட்டத்தில் திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், மகளிரணி, மகளிர் பாசறை தோழர்கள் மற்றும் நகர திமுக இலக்கிய அணி, மகளிர் நிர்வாகிகள், பொதுமக்கள் ஆகியோர் பெருந்திரளாக கலந்து கொண்டு இரு நூல்களையும் வாங்கிச் சென்றனர்.
செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்ட பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் நடத்தும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி வீரமணி எழுதிய “ஆர்எஸ்எஸ் எனும் டிரோஜன் குதிரை” நூல் அறிமுக விழா அரங்கக் கூட்டமாக 19.7.2026 அன்று மாலை 5 மணிக்கு சிங்கப்பெருமாள் கோயிலில் உள்ள கே.பி.ராஜன் இல்லத்தில் நடைபெற்றது.
நிகழ்வுக்கு சே.சகாயராஜ் தலைவர் பகுத்தறிவாளர் கழகம் செங்கல்பட்டு மாவட்டம் தலைமை தாங்கினார். வரவேற்புரை குழல் லோ.குமரன் (செயலாளர் பகுத்தறிவாளர் கழகம் செங்கல்பட்டு மாவட்டம்) வரவேற்பு வழங்கினார். கவிஞர் சிவசக்திவேல் பாண்டியன் (பகுத்தறிவாளர் கழகம், சிங்கப்பெருமாள்கோயில்) ஒருங்கிணைத்தார்.
மு.பிச்சைமுத்து (துணைத்தலைவர் பகுத்தறிவாளர் கழகம், செங்கல்பட்டு மாவட்டம்). கழக மாவட்டக் காப்பாளர் மா.சமத்துவமணி ஆகியோர் தொடக்க உரை நிகழ்த்தினர். நூல் அறிமுக உரையை கழக பொதுச்செயலாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி நிகழ்த்தினார்.
சிறப்பாக நடைபெற்ற இக்கூட்டத்தில் திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழக மற்றும் தோழமை இயக்கங்களைச் சார்ந்த தோழர்கள் கலந்து கொண்டனர்.
தருமபுரி

தருமபுரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்-பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் சார்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதிய “ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை” நூல் அறிமுக விழா தருமபுரி மாவட்ட பெரியார் மன்றத்தில் 18.07.2026 சனிக்கிழமை மாலை 5:00 மணிக்கு பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் கதிர்.செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது, இந்நிகழ்விற்கு பகுத்தறிவாளர் கழக மாவட்டச் செயாளர் இர.கிருஷ்ணமூர்த்தி வரவேற்புரை நிகழ்த்தினார்.
தகடூர்.தமிழ்ச்செல்வி (மாநில மகளிரணி செயலாளர்) தொடக்கவுரையற்றினார். ஊ.ஜெயராமன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) நூலை பெற்றுக்கொண்டு சிறப்பித்தார்.
மாவட்டத் தலைவர் பீம.தமிழ்பிராகரன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் மா.செல்லதுரை ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.
முனைவர் காஞ்சி பா.கதிரவன் (மாநில அமைப்பாளர், பக.) நூல் அறிமுக உரையாற்றி சிறப்பித்தார்.
பொதுக்குழு உறுப்பினர் க.கதிர், மாவட்ட துணைச் செயலாளர் சி.காமராஜ், தொழிலாளர் அணி மாவட்ட செயலாளர் பெ.மாணிக்கம், காரிமங்கலம் ஒன்றிய தலைவர் இரா.இராமசாமி, காமலாபுரம் கிளை கழக தலைவர் இரா.சின்னசாமி, மேனாள் மாவட்ட செயலாளர் பெ.கோவிந்தராஜ், மகளிர் பாசறை, பெ.கோகிலா, வி.சோபியா பக, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விவாசாயி அணி மாவட்டத் தலைவர் ஊ.காந்தி, அ.பிரபாகரன் இளைஞரணி, ஊற்றங்கரை கோ.சரவணன், ஊற்றங்கரை வெ.ரம்யா, இரா.இராஜா, பா.மதிக்கண்ணன், த.ஈழவேந்தன், க.சரவணன், ச.கி.செம்மொழியரசு, ச.கி.வீரமணி மாணவர் கழகத் தலைவர், இர.சேட்டு, சி.சக்திவேல், சி.சிவப்பிரகாசம், சி.பிரகாசம், ப.சுமதி, கண். இராமச்சந்திரன் நகர இளைஞரணி ஆகியோர் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.
மேலும் இந்நிகழ்வில் பங்கேற்ற அனைவரும் ஆர்வமுடன் நூலை பெற்றுக் கொண்டனர்.
இறுதியாக பகுத்தறிவாளர் கழக மாவட்ட அமைப்பாளர் தி.அன்பரசு இந்நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் சிறப்பான கருத்துரையுடன் நன்றியினைக் கூறினார்.
பெரியகுளம்

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் எழுதிய ஆர்எஸ்எஸ் என்னும் டிரோஜன் குதிரை நூல் .அறிமுக விழா 18.7.2026 அன்று கீழ வடகரை மோகன் இல்லத்தில் நடைபெற்றது.
தேனி மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் மோகன் தலைமை தாங்கினார்
பொதுக்குழு உறுப்பினர் அன்புக்கரசன் வரவேற்பு ரையாற்றினார். பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் சி. மகேந்திரன் தொடக்க உரையாற்றினார்.
பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநிலத் தலைவர் முனைவர் வா.நேரு சிறப்புரையாற்றினார்.
திராவிடர் கழக மாவட்டத் தலைவர் சுருளிராஜ். செயலாளர் மணிகண்டன்.
மற்றும் சுருளிப்பட்டி சிவா, கருப்புச் சட்டை நடராஜன். ஆண்டிபட்டி கண்ணன். செந்தில்குமார் பெத்தண்ணசாமி, சேகர், எழுத்தாளர் நாகநந்தினி, எழுத்தாளர் ராமு. ஜெயராஜ், வெற்றித் தமிழர் மாவட்ட தலைவர் மணி கார்த்தி, கண்ணன், இப்ராஹிம், தங்கம், ரஹீம், மற்றும் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள்.
பொதுமக்கள், பகுத்தறிவுச் சிந்தனை கொண்ட தோழர்கள் கலந்து கொண்டார்கள்.
முனைவர் வா.நேரு பகுத்தறிவு சிந்தனையுடன் ஆர் எஸ் எஸ் பற்றி ஆசிரியர் எழுதிய நூலில் உள்ள செய்திகளை மிகவும் தெளிவாக புரியும் படியாக சுமார் ஒரு மணி நேரம் எடுத்துப் பேசினார்.
எழுத்தாளர் நாகநந்தினி நூலின் தலைப்பு வரலாறு குறித்து பேசினார்.
20 பேர் உடனடியாக பணம் கொடுத்து நூலை பெற்றுக் கொண்டார்கள்.
