அயோத்தி ராமன் கோயில் நன்கொடை திருட்டு: பிரதமர் மோடியின் மவுனம் ஏற்றுக்கொள்ள முடியாதது! ராகுல் காந்தி, கார்கே கூட்டாக கடிதம்!

புதுடில்லி, ஜூலை 20 அயோத்தி ராமன் கோயில் நன்கொடை கையாடல் விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தக் கோரி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் பிரதமர் நரேந்திர மோடிக்கு கூட்டாக கடிதம் எழுதியுள்ளனர்.

அந்தக் கடிதத்தில் அவர்கள் குறிப்பிட்டு உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:

ராமன் கோயில் நன்கொடை கையாடல் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும். கோயிலுக்காகத் தங்க ளின் பங்களிப்பை வழங்கிய லட்சக்க ணக்கான பக்தர்கள் இந்தத் திருட்டுச் சம்பவத்தால் வஞ்சிக்கப்பட்டதாக உணர்கிறார்கள்.

உச்ச நீதிமன்றத்தின் வழி காட்டுதலின் பேரில் தான் இந்தக் கோயில் அறக்கட்டளை அமைக்கப்பட்டதாகப் பிரதமர் நாடாளு மன்றத்தில் அறிவித்திருந்தார். ஆனால், இந்த அறக்கட்ட ளையின் உறுப்பினர்கள் ஆர்.எஸ்.எஸ் (RSS) மற்றும் வி.ஹெச்.பி (VHP) ஆகிய அமைப்புகளுடன் தொடர்புடையவர்களாக இருக்கி றார்கள். மேலும், அறக்கட்டளையின் முன்னாள் பொதுச் செயலாளர் பிரதமரின் நெருங்கிய கூட்டாளி ஆவார்.

இவ்வளவு பெரிய குற்றச்சாட்டு எழுந்திருக்கும் நிலையிலும், இது குறித்து பிரதமர் மோடி மவுனம் காப்பது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.

எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகள்

‘‘பொறுப்புக்கூறலையும், ஏற்பட்டுள்ள இழப்பைச் சரி செய்வதையும் உறுதி செய்வது பிரதமரின் கடமையாகும்.”

இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் பிரதமரிடம் வலி யுறுத்தியுள்ள முக்கிய கோரிக்கைகள் வருமாறு:

அறக்கட்டளையின் நிதி விவகாரங்கள் குறித்து உடனடியாக ஒரு சுதந்திரமான, விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

ரொக்கம், தங்கம், வெள்ளி உள்ளிட்ட அனைத்து காணிக்கை களும் எவ்வாறு கையாளப்பட்டன என்பது குறித்தும் விசா ரிக்கப்பட வேண்டும் விசாரணை அறிக்கை யின் முடிவுகளையும், அறக்கட்ட ளையின் கணக்கு விவரங்களையும் பொதுவெளியில் வெளியிட வேண்டும்.

இந்தக் கடிதம் தற்பொழுது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *