புதுடில்லி, ஜூலை 20 நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் தொகுதி மறுவரையறை மற்றும் எப்சிஆர்ஏ (FCRA) திருத்த மசோதாக்களை ஒருதலைப்பட்சமாக நிறைவேற்றக் கூடாது என்றும், இதுகுறித்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி விவாதிக்க வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டெரிக் ஓ. பிரையன் கடிதம் எழுதியுள்ளார்.அவர் பிரதமருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
எதிர்க்கட்சிகளின் அச்சம்
மழைக்கால கூட்டத்தொடருக்கான அரசுப் பணிகள் பட்டியலில் தொகுதி மறுவரையறை மசோதா இடம்பெறவில்லை. இருப்பினும், முக்கியமான சட்டங்களை கையாள் வதில் ஒன்றிய அரசின் கடந்தகால சந்தேகத்துக்குரிய செயல்பாடுகள் காரணமாக, எதிர்க்கட்சிகள் கடுமை யான அச்சத்தில் உள்ளன.
நாட்டின் ஜனநாயக எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் தொகுதி மறுவரையறை விவகாரத்தில், அரசு எந்தவிதமான ரகசிய உத்திகளையும் கையாளக் கூடாது.
விளிம்புநிலை அமைப்புகள் பாதிப்பு
இந்த கூட்டத்தொடரில் கொண்டு வரப்பட உள்ள ‘வெளிநாட்டு நிதி பங்களிப்பு ஒழுங்குமுறை (FCRA) திருத்த மசோதா 2026’, நாட்டின் ஏழ்மையான மற்றும் விளிம்புநிலை சமூகங்களுக்காகப் பணியாற்றும் தொண்டு நிறுவனங் களைப் பலவீனப்படுத்தும் வகையில் உள்ளது.
இந்த மசோதாவில் முன்மொழியப் பட்டுள்ள புதிய திருத்தங்கள், கிறிஸ் தவ சமூகத்தினரால் நடத்தப்படும் ஆயிரக்கணக்கான கல்வி நிறுவனங் களின் செயல்பாடுகளைப் பெருமளவில் பாதிக்கும்.
“இந்த இரு மசோதாக்களும் நாட்டின் ஜனநாயகத்தோடு தொடர்புடையவை என்பதால், அரசு ஒருதலைப்பட்சமாக எந்த முடிவும் எடுக்கக் கூடாது. அனைத்து அரசியல் கட்சிகளையும் அழைத்து விரிவான ஆலோசனை நடத்திய பிறகே அடுத்தகட்ட நடவ டிக்கை எடுக்க வேண்டும்.” என டெரிக் ஓ.பிரையன் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
