நான் ஒன்றும் போலீஸ்காரர்களுக்குப் பரிந்து கொண்டு பேசவில்லை; உண்மையைச் சொல்லவேண்டுமானால் போலீஸ்காரர்களைப் பாதுகாக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும். போலீஸ்காரன் ஏதோ தப்புப் பண்ணி இருக்கலாம். அவனை மக்களுக்குக் காட்டிக் கொடுக்காமல், இலாகா மூலம் கண்டிப்பும், நடவடிக்கையும் தான் எடுத்துக் கொள்ள வேண்டும். போலீஸ்காரன் மீது இன்று நடவடிக்கை எடுப்பது என்றால் நாளை எவன் அய்யா அவனுக்குப் பயன்படுவான்? எப்படி அய்யா அவனுக்கு மதிப்பு இருக்கும்?
தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ தொகுதி 1, ‘மணியோசை’
