அவ்வப்போது நடக்கின்ற தமிழ்நாடு, கேரள நாடு, ஆந்திர நாடு ஆகியவற்றின் தேர்தல் முடிவுகளைப் பார்த்தாலே அவனவன் ஜாதியைத்தான் அவனவன் விரும்புகிறான் என்கிறபோது – “மக்கள் விகிதாச்சாரம் என்ன? மக்கள் மனநிலை என்ன?” என்பதற்குரிய ஆரூடம், ஜோசியம் ஏதேனும் பார்க்க வேண்டுமா? அல்லது மக்களுக்கு இருக்கும் வகுப்புணர்ச்சியைத் தெரிந்து கொள்ள ‘மை’ வைத்துப் பார்க்க வேண்டிய தேவையுமுமே உள்ளதா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
