சென்னை, ஜூலை 17- நவீனா – மணிகண்டன் ஆகியோரின் ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வினை கழக ஒருங்கிணைப்பாளர் வி.பன் னீர்செல்வம், மற்றும் நண்பர்கள் முன்னி லையில் பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் நடத்தி வைத்தார் (15.7.2026).
மணமகள் நவீனா மணமுறிவு பெற்றவர்.இவருக்கு இரு குழந்தைகள் உள்ளனர். பத்து வயது மகன் லித்தின் புற்றுநோய் பாதிப்புடன் போராடிக் கொண்டிருக்கும் ஒரு சிறுவன். தன் அம்மா தன் அப்பாவாகிய முதல் கணவனால் அடைந்த கொடுமைகளை நேரில் கண்டவன் அவனுக்கு தான் இறந்துவிடுவோம் என்பதும் தெரியும்.
தான் இறப்பதற்குள் அம்மா ஒரு நல்ல வாழ்வு வாழ்ந்திட வேண்டும் என்பதற்காக இன்னொரு திருமணம் செய்யச் சொல்லி, தங்களுக்கு நன்கு அறிமுகமான மணிகண்டனை திருமணம் செய்விக்க நம் திருமண நிலையத்திற்கு அழைத்து வந்தான். நம்மிடம் அந்தச் சிறுவன் லித்தினே சொன்னது இது.
