சென்னை மியாட் மருத்துவமனையில் அவசரகால மருத்துவம் குறித்து விளக்கும் அருங்காட்சியகம்

3 Min Read

சென்னை, ஜூலை 17 சென்னை மணப்பாக்கம், மியாட் பன்னாட்டு மருத்துவமனையில், ‘உயிர் காக்கும் தருணங்களின் உலகம்’ என்ற தலைப்பில், அவசர கால சிகிச்சை குறித்த விழிப்புணர்வு அருங்காட்சியகம் திறக்கப்பட்டுள்ளது.

அருங்காட்சியகத்தை, சென்னை போக்குவரத்து காவல் துறை கூடுதல் இயக்குநர் சாமூண்டீசுவரி, நேற்று முன்தினம் (15.7.2026) திறந்து வைத்தார்.

அவசர காலகட்டத்தில் பொதுமக்களுக்கு முதலில் வந்து உதவி செய்த பொதுமக்கள், போலீசார் மற்றும் மருத்துவ குழுவினருக்கு, ‘நகரத்தின் தேவதைகள்’ எனும் விருதை வழங்கி அவர் பேசியதாவது:

‘கோல்டன் ஹவர்’ என்பது எவ்வளவு முக்கியம் என்பதை நாம் உணர வேண்டும். அதைவிட, அந்த நேரத்தில் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.  விபத்து நிகழும் இடத்தில் உள்ள போலீசார் பயம், பதட்டம் இல்லாமல் இருக்க வேண்டும். சரியாக உதவி செய்கிறோமா என்பதை தெரிந்துக் கொள்ளவே, இந்த அருங்காட்சியகம். எதிர்காலத்தில், போலீசாருக்கு அவசர கால விழிப்புணர்வு பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.  இவ்வாறு சாமுண்டீஸ்வரி பேசினார்.

அருங்காட்சியகம் குறித்து, மியாட் மருத்துவமனை மேலாண் இயக்குனர் பிரித்வி மோகன்தாஸ் கூறியதாவது:

விபத்து நடக்கும் இடத்திற்கு அருகில், மருத்துவமனை இருந்தால் பிரச்னை இல்லை. நாம் இருக்கும் இடத்தில் விபத்து நடந்தால் என்ன செய்ய வேண்டும்; என்ன செய்ய கூடாது என்பது குறித்த விழிப்புணர்வு மிகவும் அவசியம். இதுகுறித்து, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே, விழிப்புணர்வு கையேடு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகம் ஒரு மாதம் செயல்படும். பொதுமக்கள் வந்து பார்வையிடலாம். பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியருக்கும் அழைப்பு விடப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் போக்குவரத்து காவல்துறையினர் உதவியுடன், இந்த விழிப்புணர்வு கண்காட்சி விரிவு படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

 

தமிழ்நாட்டில் மின் தேவை புதிய உச்சம்

 ஒரே நாளில் 21,724 மெகாவாட் பதிவு

சென்னை, ஜூலை 17- தமிழ்நாட்டில் மின்தேவை புதிய உச்சம் அடைந்து ஒரே நாளில் 21,724 மெகாவாட் பதிவாகி இருப்பதாக, மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழ்நாட்டில் எப்போதும் இல்லாத அளவிற்கு இந்தாண்டு கடுமையான வெயில் பொதுமக்களை வாட்டி வதைக்கிறது. கடந்த 14ஆம் தேதி மாநிலத்தின் மின் தேவை புதிய உச்சத்தை அடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: வாரத்தின் தொடக்க நாளான திங்கட்கிழமை 21,629 மெகாவாட் பதிவான நிலையில் 14-ஆம் தேதி மின்தேவை 21,724 மெகாவாட் என்ற புதிய வரலாற்று உச்சத்தை எட்டியது. இருப்பினும், அன்றைய மொத்த மின்நுகர்வு 453.447 மில்லியன் யூனிட்கள் ஆக இருந்தது. இது, 2026 ஏப்ரல் 24 அன்று பதிவான 471.456 மில்லியன் யூனிட்கள் என்ற அதிகபட்ச தினசரி மின்நுகர்வு சாதனையை விட குறைவு தான். இருப்பினும், இது ஜூலை மாதத்தில் புதிய உச்சம் ஏற்படுவது அரிது தான். இவ்வாறு அவர்கள் கூறினர்.

 

கீழடியில் 3 வகை வடிகால் அமைப்பு கண்டெடுப்பு!

கீழடியில் நடைபெறும் 11-ஆம் கட்ட அகழாய்வில் ஒரே குழியில் மூன்று வகை வடிகால் அமைப்பு கண்டறியப்பட்டுள்ளது. 45 செ.மீ அகலமும் 2 மீட்டர் நீளமும் கொண்ட இந்த அமைப்பு முழுமையாக வெளிப்பட்டுள்ளது. முதல் முறையாக ஒரே குழியில் மூடிய நிலையில் உள்ள வடிகால் அமைப்பு, அருகிலேயே பீப்பாய் மற்றும் சுருள் வடிவ குழாய் போன்ற வடிகால் அமைப்பு கண்டறியப்பட்டுள்ளது.

ஆதரவு

தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரி டில்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் சார்பாக உண்ணாநிலைப் போராட்டம் செய்யும் சோனம் வாங்சுக்கை திமுக எம்.பி. ஆ.ராசா. நேரில் சந்தித்து திமுக சார்பில் போராட்டத்திற்கு ஆதரவு!

 

 

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *