‘ஞானபீட விருது’ பெற்ற கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்த்து!

0 Min Read

தமிழ் இலக்கியத்திற்கு கவிஞர் வைரமுத்து ஆற்றிய குறிப்பிடத்தக்க பங்களிப்புகள்,அவரது படைப்பாற்றல் மற்றும் தனித்துவமான கவிதை வெளிப்பாடு ஆகியவற்றிற்காக 2025 ஆம் ஆண்டுக்கான 60 ஆவது ‘ஞானபீட விருதை’ பாரதிய ஞானபீடம் கடந்த மார்ச் 14 ஆம் தேதி அறிவித்தது.

ஞானபீடம் விருது வழங்கும் விழா, கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் பிறந்த நாளில் ஜூலை 13 அன்று டில்லியில் நடைபெற்றது.

ஞானபீட விருதினை கவிஞர் வைரமுத்து அவர்களுக்கு முன்னாள் ஒன்றிய அமைச்சர் டாக்டர் கரன்சிங் வழங்கினார்.

டில்லியில் விருது பெற்று தமிழ்நாடு திரும்பிய கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்குத் தமிழர் தலைவர் தொலைப்பேசி வாயிலாக வாழ்த்துத் தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *