தமிழ்நாட்டின் தனிப்பெரும், பொதுவான தமிழ்ச் சான்றோர்களில் முக்கியமானவரும், எளிய குடும்பத்தில் பிறந்து, வறுமைத் தீயில் வாடி, அந்தப் பட்டறையில் பதப்படுத்தப்பட்டு, கடும் உழைப்பையே தனது மூலதனமாக்கி, இன்று மற்றவர்களுக்கு ஓர் எடுத்துக்காட்டாக உயர்ந்தவருமான உத்தமர், இன்று (15.8.2026)
90 வயது காணும் மாமனிதர், சிறப்புமிகு செவாலியர் டாக்டர் வி.ஜி.சந்தோசம் அவர்கள்,
‘அண்ணாச்சி’ என்று அனைவராலும் அழைத்து உறவு கொண்டாடப்படும் மனிதநேயர். திருமிகு வி.ஜி.பி. சகோதரர்களை உலகறியச் செய்த மகத்தான பண்பாளர் அய்யா வி.ஜி.சந்தோசம் அவர்கள்.
‘ஈதல் இசைபட வாழ்தலுக்கு’ என்றும் இலக்கண, இலக்கியமான இணையற்ற பெரு உள்ளத்தினர்.
‘ஈத்துவக்கும் இன்பம்’ என்றும் அவரது தனி அடையாளம்.
வள்ளுவர் சிலைகளை உலக நாடுகளில் நிறுவிய வள்ளுவ வள்ளல் அவர்! கூட்டுக் குடும்ப உறவுக்கு அவர் ஓர் ஒப்பற்ற எடுத்துக்காட்டு.
அடக்கம் + உழைப்பு + அரவணைத்தல் + தமிழ்த் தொண்டறம் இவற்றின் ஒட்டுமொத்த கூட்டுத் தொகை அவர்.
நல்ல உடல்நலத்தோடு, நூறாண்டு தாண்டியும் வாழ்ந்து, குடும்பத்திற்கும், குவலயத்திற்கும் வழிகாட்ட வேண்டும் என விழைகிறோம். தூய தொண்டறச் செம்மல் வாழ்க! வாழ்கவே!
அன்புடன்,
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
