உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில் ஓய்வுபெற்ற 46 ஆயிரம் பேருக்கு இடைக்கால ஓய்வூதியம் இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

2 Min Read

சென்னை,  ஜூலை 16- உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில் உள்ள ஓய்வுபெற்ற 46 ஆயிரம் பேருக்கு இடைக்கால ஓய்வூதியம் வழங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிப்பதாவது:

தமிழ்நாட்டில் 2003 ஏப்.1ஆம் தேதி முதல் பணியில் சேர்ந்து 2025 டிச.31ஆம் தேதிவரை ஓய்வுபெற்ற உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில் வரக்கூடிய ஊழியர்கள் 46 ஆயிரம் பேர் உள்ளனர். அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. இந்நிலையில் அவர்களுக்கு இடைக்கால ஓய்வூதியம் வழங்குவதற்காக கடந்த 2025 ஜூன் 16இல் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் 2026 ஜனவரி 1 முதல் இடைக்கால ஓய்வூதியமாக அவர்களுக்கு ரூ.10 ஆயிரம்வழங்கப்பட வேண்டும்.

ஆனால் ஓய்வுபெற்ற 46 ஆயிரம் பேருக்கும் இந்த இடைக்கால ஓய்வூதியம் இதுவரை வழங்கப்படவில்லை. ஓய்வூதியம் என்பது சலுகையல்ல; அது உரிமை. தங்களது கடந்த காலஉழைப்பு சக்தியை இச்சமூகத்துக்கு வழங்கியவர்களுக்கு, சமூக பொருளாதார பாதுகாப்பை வழங்க வேண்டியது இந்த சமூகத்தின் கடமையாகும். ஊழியர்களின் கண்ணியமான வாழ்வுக்கு ஓய்வூதியம் அவசியம் எனவும் உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

எனவே தமிழ்நாடு அரசு, 2003 ஏப்ரல் 1 முதல் பணியில் சேர்ந்து, 2025 டிச.31 வரை ஓய்வுபெற்ற அனைவருக்கும், இடைக்கால ஓய்வூதியமான ரூ.10,000-அய் மாதந்தோறும் வழங்க வேண்டும் இத்துடன் இந்த பணியாளர்களில் உயிரிழந்த 7,864 பேரின் இணையர்களுக்கு குடும்ப ஓய்வூதியத்தை வழங்கவும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பொறியியல் படிப்பில்

7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில்
139 பேருக்கு ஆணை!

சென்னை, ஜூலை 16- பொறியியல் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில் சிறப்பு பிரிவினருக்கான இணைய வழியில் கலந்தாய்வு கடந்த 13ஆம் தேதி நடந்தது. இதைத்தொடர்ந்து, அவர்களுக்கு தற்காலிக ஒதுக்கீடு செய்யப்பட்டு அதை உறுதிபடுத்த 14ஆம் தேதி மாலை 5 மணி வரை வாய்ப்பு வழங்கப்பட்டது. தற்காலிக ஒதுக்கீட்டை உறுதிசெய்த 139 மாணவர்களுக்கு நேற்று (15.7.2026) காலை 7 மணிக்கு கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை இணைய வழியில் வழங்கப்பட்டது. அவர்களில் 91 பேர் மாற்றுத் திறனாளிகள். 38 பேர் விளையாட்டு வீரர்கள், 8 பேர் முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகள் ஆவர்.

இந்த நிலையில், சிறப்பு பிரிவினருக்கான இணைய வழி பொது கலந்தாய்வு நேற்று (15.7.2026) தொடங்கியது. இதில் பங்கேற்க மொத்தம் 4,927 பேர் தகுதிபெற்றுள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *