எஸ். முத்தையா முதலியார் நினைவுநாள் இன்று

1 Min Read

சென்னை மாகாணத்தின் சட்டமன்ற உறுப்பினராகவும், மாகாண அரசில் கல்வி மற்றும் சுங்கவரித்துறை அமைச்சராகவும் இருந்தவர். இவர் சிலகாலம் சுயாட்சிக் கட்சியிலும் பின்னர் நீதிக்கட்சியிலும் உறுப்பினராக இருந்தார். இவர் வகுப்புவாரி இட ஒதுக்கீடு அரசாணை நடைமுறைப்படுத்தப்பட முக்கியக் காரணமாயிருந்தவர். சென்னை மாகாணத்தில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த இவர் பெரும் முயற்சி மேற்கொண்டார். சுப்பராயன் ஆட்சிகாலம் வரை நீடித்த மதுவிலக்கு அதற்குப்பின் ஆட்சிக்கு வந்த நீதிக்கட்சி காலத்தில் கைவிடப்பட்டது. மதுவிலக்குச் சங்கத்தின் செயலாளரான திரு ஹெர்பெர்ட் நாடர்சன் மதுவிலக்கிற்காக இவர் எடுத்துக் கொண்ட முயற்சிகளை லண்டனிலுள்ள இம்பீரியல் கழகத்தில் பாராட்டியுள்ளார்.  இன்று எஸ். முத்தையா முதலியார் அவர்களின் நினைவு நாள் (15.7.1953)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *