கவுகாத்தி, ஜூலை 15– கடந்த 2 ஆண்டில் அசாமில் இருந்து 1,679 வங்கதேசத்தினர் வெளியேற்றப்பட்டு உள்ளதாக முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.
அண்டை நாடான வங்கதேசத்தை சேர்ந்த மக்கள் இந்தியாவின் மேற்குவங்கம், அசாம், வடகிழக்கு மாநிலங்களில் சட்டவிரோதமாக குடியேறி வருகின்றனர். அங்கிருந்து இவர்கள் தென்மாநிலங்களுக்கும் ஊடுருவி வருகின்றனர். இதைத் தடுக்க ஒன்றிய அரசும், பல்வேறு மாநில அரசுகளும் அதிதீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக அசாம் மாநில அரசு, சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேச மக்களை அவர்களின் சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பி வருகிறது.
இது தொடர்பாக அசாம் சட்டப் பேர வையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு முதல மைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா நேற்று (14.7.2026) எழுத்துப் பூர்வமாக அளித்த பதிலில் கூறியதாவது:
சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்த அசாம் அரசு உறுதிபூண்டு உள்ளது. இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசின் உத்தரவுகளை அசாம் அரசு கண்டிப்புடன் பின்பற்றுகிறது. கடந்த 2024-ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி முதல் 2026-ஆம் ஆண்டு ஜூன் 30-ஆம் தேதி வரையிலான 2 ஆண்டு காலத்தில் அசாமில் இருந்து 1,679 வங்கதேச மக்கள் வெளியேற்றப்பட்டு உள்ளனர். அவர்கள் வங்கதேசத்துக்கு பத்திரமாக திருப்பி அனுப்பப்பட்டனர்.
சட்டவிரோத குடியேறிகளை வெளியேற் றும் போது மனிதாபிமான அடிப்படையில் அசாம் அரசு செயல்படுகிறது. மனித உரிமை மீறல்கள் முற்றிலுமாக தவிர்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
சிபிஎஸ்இ சுற்றறிக்கையை திரும்பப் பெற வேண்டும்
தி.மு.க. எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் வலியுறுத்தல்
சென்னை, ஜூலை 15– சிபிஎஸ்இ பள்ளிகளில் 3ஆவது மொழியை கட்டாயமாக்கும் புதிய சுற்றறிக்கைக்கு திமுக எம்.பி தமிழச்சி தங்க பாண்டியன் கடும் கண்டனம் தெரிவித் துள்ளார். இதனை “மொழித் திணிப்பின் மற் றொரு வடிவம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழ்ச்சி தங்கபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“3ஆவது மொழியை ‘விருப்பம்’ என்ற பெயரில் அறிமுகம் செய்துவிட்டு, அதில் தேர்ச்சி பெற வேண்டிய கட்டாய நிபந்தனை யாக மாற்றுவது மறைமுக மொழித் திணிப்பு அல்லாமல் வேறு என்ன?”
புதிய புதிய வடிவங்களில் 3ஆவது மொழியை கட்டாயப்படுத்தும் முயற்சிகள், தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளைப் புறக் கணிக்கும் செயலாகும்.
9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்கள் 3ஆவது மொழிக்கான பள்ளி அளவிலான உள் மதிப்பீட்டுத் தேர்வில் கட்டாயம் தேர்சி பெற்றால் மட்டுமே 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி சான்றிதழ் வழங்கப்படும் என சிபிஎஸ்சி வெளியிட்டுள்ள சுற்றறிக்கையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். தமிழ் நாட்டின் இரு மொழிக் கொள்கைக்கு எதிரான இந்த நடவடிக்கையை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
