பொறியியல் பிரிவுகளில் ‘கம்ப்யூட்டர் இன்ஜினியரிங்’தான் இந்தியாவிலேயே முதலிடத்தில் உள்ளது அகில இந்திய ஆய்வு அறிக்கையில் தகவல்

2 Min Read

சென்னை, ஜூலை 13 மெக்கானிக்கல், சிவில் மற்றும் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் போன்ற முக்கிய பிரிவுகள் தொடர்ந்து கணிசமான எண்ணிக் கையிலான சேர்க்கைகளையும் பட்டதாரிகளையும் பதிவு செய்து வரும் அதே வேளையில், கணினி சார்ந்த துறைகள் அதிகளவிலான மாணவர்களை ஈர்த்து வருகின்றன.

உயர்கல்விக்கான அகில இந்திய கணக்கெடுப்பின் (AISHE) 2023-2024 ஆம் ஆண்டின் அண்மைய அறிக்கையின்படி, அனைத்து பொறியியல் பிரிவுகளிலும் அதிக எண்ணிக்கையிலான சேர்க்கைகளைப் பதிவுசெய்து, கணினி பொறியியல் (Computer Engineering) இந்தியாவின் மிகவும் விருப்பமான பொறியியல் பிரிவாக உருவெடுத்துள்ளது. மென்பொருள் மேம்பாடு (software development), செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் பிற டிஜிட்டல் தொழில்நுட்பங்களில் மாணவர்களுக்கு அதிகரித்து வரும் வேலைவாய்ப்பு ஆர்வத்தை இந்த போக்கு எடுத்துக்காட்டுகிறது. பொறியியல் பிரிவுகளில் கணினி பொறியியல் சேர்க்கையில் முதலிடத்தில் உள்ளது, அதைத் தொடர்ந்து எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், சிவில் இன்ஜினி யரிங், எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் மற்றும் தகவல் தொழில்நுட்பம் (Information Technology) ஆகியவை அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.

இளங்கலை, முதுகலை, ஒருங்கிணைந்த படிப்புகள், எம்.ஃபில் மற்றும் பி.எச்.டி படிப்புகள் அனைத்திலும் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப மாணவர் சேர்க்கை 46,33,868 ஆக உள்ளது என்று அந்த அறிக்கை காட்டுகிறது.

பட்டதாரிகளின் எண்ணிக் கையிலும் இந்த போக்கு பிரதிபலிக்கிறது. அறிக்கையின் இளங்கலை தேர்ச்சி தரவு களின்படி, 2023-2024 ஆம் ஆண்டில் கணினி பொறியியல் (CE) 2,62,408 பட்டதாரிகளை உருவாக்கியுள்ளது, இது மொத்தம் தேர்ச்சி பெற்ற 8,33,808 பொறி யியல் மற்றும் தொழில்நுட்ப பட்டதாரிகளில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்காகும். இதனுடன் ஒப்பிடுகையில், மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கில் 1,13,390 பேரும், எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்கில் 1,11,242 பேரும், சிவில் இன்ஜினியரிங்கில் 88,839 பேரும், எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்கில் 72,062 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அண்மைய AISHE அறிக்கையானது தொழில்நுட்பக் கல்வியின் தொடர்ச்சியான விரி வாக்கத்தையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. 2023-2024 ஆம் ஆண்டில் ஒட்டுமொத்த உயர்கல்வி சேர்க்கை சாதனை அளவாக 4.5 கோடி மாணவர்களை எட்டியுள்ளது, அதே நேரத்தில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) பிரிவுகளில் சேர்க்கை ஒரு கோடித் தாண்டியுள்ளது, இது தொழில்நுட்ப மற்றும் தொழில்முறை கல்விக்கான நிலை யான தேவையை எடுத்துக் காட்டுகிறது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *