சென்னை அய்.அய்.டிக்கு ஒன்றிய தகவல் ஆணையம் உத்தரவு

‘மானிய நிதிப் பயன்பாட்டு விவரங்களை வெளியிட வேண்டும்’

சென்னை, ஜூலை 13 தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கடந்த 3 நிதியாண்டுகளின் மானிய நிதிப் பயன்பாடு மற்றும் திட்ட விவரங்களை வெளியிடுமாறு சென்னை அய்அய்டி-க்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005-இன் கீழ் கோரப்பட்ட, 2023-2024ஆம் நிதியாண்டிற்கான மானிய உதவிகளின் திட்டவாரி பயன்பாட்டு விவரங்களை விரிவாக வழங்குமாறு சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்திற்கு ஒன்றிய தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அனன்யா துபே என்பவர் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  கடந்த மூன்று நிதியாண்டுகளில் இந்த நிறுவனம் பெற்ற மானிய உதவிகளின் விவரங்கள், திட்டவாரி நிதிப் பயன்பாடு, பயன்பாட்டுச் சான்றிதழ்களின் நகல்கள் மற்றும் அய்.அய்.டி மெட்ராஸ் மேற்கொண்ட கூட்டுமுயற்சிகளின் பெயர்கள் ஆகியவற்றை அவர் அந்த மனுவில் கோரியிருந்தார். இதன் தொடர்ச்சியாகவே, இந்த நிதிப் பயன்பாட்டு விவரங்களை வெளிப்படுத்துமாறு மத்திய தகவல் ஆணையம் தற்போது சென்னை அய்.அய்.டிக்கு அறிவுறுத்தியுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *