‘மானிய நிதிப் பயன்பாட்டு விவரங்களை வெளியிட வேண்டும்’
சென்னை, ஜூலை 13 தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கடந்த 3 நிதியாண்டுகளின் மானிய நிதிப் பயன்பாடு மற்றும் திட்ட விவரங்களை வெளியிடுமாறு சென்னை அய்அய்டி-க்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005-இன் கீழ் கோரப்பட்ட, 2023-2024ஆம் நிதியாண்டிற்கான மானிய உதவிகளின் திட்டவாரி பயன்பாட்டு விவரங்களை விரிவாக வழங்குமாறு சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்திற்கு ஒன்றிய தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அனன்யா துபே என்பவர் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று நிதியாண்டுகளில் இந்த நிறுவனம் பெற்ற மானிய உதவிகளின் விவரங்கள், திட்டவாரி நிதிப் பயன்பாடு, பயன்பாட்டுச் சான்றிதழ்களின் நகல்கள் மற்றும் அய்.அய்.டி மெட்ராஸ் மேற்கொண்ட கூட்டுமுயற்சிகளின் பெயர்கள் ஆகியவற்றை அவர் அந்த மனுவில் கோரியிருந்தார். இதன் தொடர்ச்சியாகவே, இந்த நிதிப் பயன்பாட்டு விவரங்களை வெளிப்படுத்துமாறு மத்திய தகவல் ஆணையம் தற்போது சென்னை அய்.அய்.டிக்கு அறிவுறுத்தியுள்ளது.
