காவிரியும் கைகொடுக்கவில்லை – கிணற்றுப் பாசனமும் உதவவில்லை! மின் தடையால் தண்ணீரின்றி காய்ந்துவரும் நெற்பயிர்கள் – விவசாயிகள் வேதனை!

தஞ்சாவூர், ஜூலை 13-  காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆழ்துளை கிணறு வசதி உள்ள விவசாயிகள் முன்பட்ட குறுவை சாகுபடி செய்துள்ளனர். ஏப்ரல் மாதத்தில் நாற்று விட்டு நடவு செய்த முன்பட்ட குறுவைப் பயிர்கள் தற்போது கதிர் வந்து காணப்படுகின்றன. சில இடங்களில் மே மாதத்தில் நடவு செய்யப்பட்ட முன்பட்ட குறுவை நெற்பயிர்கள் கதிர் வரும் தருணத்தில் உள்ளன.

பூதலூர் அருகே மரத்தகுடி என்ற பகுதியில் சில விவசாயிகள் ஆழ்துளை கிணறு தண்ணீரை பயன்படுத்தி முன்பட்ட குறுவை சாகுபடி செய்திருந்தனர். கடுமை யான வெயில் மற்றும் காற்று காரணமாக நாள்தோறும் தண்ணீர் பாய்ச்ச வேண்டிய சூழல் எழுந்துள்ளது.

தொடர்ந்து சில நாட்களாக மின்தடை ஏற்பட்டதால் தண்ணீர் பாய்ச்ச வழியின்றி நெற்பயிர்கள் காய்ந்து வருகின்றன. நடவு செய்யப்பட்ட நெல் வயல்கள் காய்ந்து வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன. மின் தடை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் உடனடியாக நட வடிக்கை எடுக்காததால் இந்த நிலை ஏற்பட்டதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

மேட்டூர் அணை திறப்பது தற்போது சாத்தியமில்லாத சூழலில் ஆழ்துளை கிணற்று பாசனத்துக்கும் மின் தடையால் பாதிப்பு ஏற்படுவதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *