புதுடில்லி, ஜூலை 13 நாட்டின் ஏவுகணை தயாரிப்பு ஒன்றிய பாதுகாப்புத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. அதாவது டிஆர்டிஓ, பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்கள் ஏவுகணை தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
இந்திய பொதுத் துறை நிறுவனங்கள் நல்ல முறையில், பன்னாட்டளவில் போட்டி போடும் அளவிற்கு சூப்பர் தொழில் நுட்பத்துடன் ஏவுகணையை அருமையாக தயாரித்து வருகின்றன.
இந்நிலையில், ஏவுகணை தயாரிப்பை யும் தனியார் நிறுவனங்களுக்கு தாரைவார்க்க மோடி அரசு அடாவடியை தொடங்கியுள்ளது.
இதுதொடர்பான அறிவிப்பின்படி, முதற்கட்டமாக ஒன்றிய அரசு ஊழி யர்களின் கடின உழைப்பில் டிஆர்டிஓ உருவாக்கிய ‘அஸ்ட்ரா மார்க் – 2 (Astra Mark 2)’ ஏவு கணையை தனியார் நிறு வனங்கள் தயாரிக்க அனுமதி வழங்கப்பட உள்ளது. அஸ்ட்ரா மார்க் – 2 உலகதரம் வாய்ந்தது. உலக நாடு களுடன் போட்டி அளவிற்கு 180 முதல் 200 கிலோமீட்டர் தூரம் வரை தாக்கும் திறன் கொண்டது.
இத்தகைய சூழலில், பிரதமர் மோடி யின் நெருங்கிய நண்பரான அதானி, பாஜகவிற்கு அதிகளவில் நன்கொடை அளிக்கும் தனியார் நிறுவனங்களான டாடா, பாரத் போர்ஜ், மஹிந்திரா மற்றும் அய்கோம் போன்றவை இனி அஸ்ட்ரா மார்க் – 2 ஏவுகணை தயா ரிப்பை மேற்கொள்ள உள்ளன.
மேலும், பிரலே (Pralay) எனப் படும் 500 கிலோமீட்டர் தூரம் தாக்கும் திறன் கொண்ட டாக்டிக்கல் பாலிஸ்டிக் ஏவுகணையும் தனியார் நிறுவனங்களுக்கு தனியாருக்கு செல்கிறது. ஏற்கெனவே விமானங்கள், ட்ரோன்கள், கடற்படை உப கரணங்கள் போன்றவை தனியாருக்குச் சென்றுவிட்டன.
தற்போது ஏவுகணை உற்பத்தியும் தனியார் நிறுவனங்களுக்கு மோடி அரசு தாரைவார்ப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மழுப்பல் விளக்கம் இந்தியாவின் பாதுகாப்புத் தேவைகள் அதிகரித்துள்ளது.
அரசுக்குச் சொந்தமான பாரத் டைன மிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தால் அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்ய முடிய வில்லை.
அதி நவீன ஏவுகணைகளை வாங்க இந்தோனேசியா போன்ற நட்பு நாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றன.
இதனால் தனியாருக்கு ஏவுகணை தயாரிப்பு ஒப்படைக்கப்படுகிறது என மோடி அரசு மழுப்பலாக விளக்கம் அளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
