குதிரை பேர விவகாரம் முக்கியக் காட்சிப் பதிவு ஆதாரங்களுடன் ஆளுநரைச் சந்திக்க திமுக திட்டம்!

1 Min Read

சென்னை, ஜூலை 13- குதிரை பேரம் விவகாரம் தொடர்பாக, தவெக அரசுக்கு எதிரான காட்சிப் பதிவு ஆதாரங்களுடன் ஆளுநர் அர்லேகரை இன்று (13.7.2026) சந்தித்து மீண்டும் புகார் கொடுக்க திமுக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப் பேரவை தேர்தலில் தவெகவுக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதைத்தொடர்ந்து, திமுக கூட்டணியில் வெற்றி பெற்ற காங்கிரஸ், விசிக, அய்யூஎம்எல் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவோடு தவெக ஆட்சி அமைத்தது.

அதிமுகவின் ஒரு பிரிவு சட்டமன்ற உறுப்பினர்களும் தவெக அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தனர். இதன் தொடர்ச்சியாக, அதிமுகவில் இருந்து விராலிமலை சி.விஜயபாஸ்கர், கரூர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா, மதுராந்தகம் மரகதம் குமாரவேல், பெருந்துறை ஜெயக்குமார், தாராபுரம் சத்தியபாமா ஆகிய சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவிகளை விலகிவிட்டு, தவெகவில் இணைந்தனர்.

பழனிசாமி குற்றச்சாட்டு

குதிரை பேரம் நடத்தி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை தவெக விலைக்கு வாங்கிவிட்டதாக பொதுச் செயலாளர் பழனிசாமி குற்றம்சாட்டினார். இது தொடர்பாக அதிமுக, திமுக, பாஜக தரப்பில் ஆளுநரிடம் தனித்தனியே புகாரும் அளிக்கப்பட்டது.

இதற்கிடையே, செய்தியாளர்களிடம் பேசிய எம்.ஆர்.விஜயபாஸ்கர், ‘‘தவெக தரப்பில் இருந்து எங்களை அணுகினர். அவர்களது அணுகுமுறை பிடித்திருந்ததால் இணைந்தோம்’’ என்று வெளிப்படையாகக் கூறினார்.

இந்நிலையில், இது தொடர்பான முக்கிய காட்சிப் பதிவு ஆதாரங்களை திமுக திரட்டியுள்ளதாகவும், அவற்றை ஆளுநர் அர்லேகரிடம் இன்று (13.7.2026) சமர்ப்பித்து, மீண்டும் புகார் கொடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *