வியட்நாம் நாட்டிற்குச் சுற்றுலாச் சென்ற தமிழர்கள் 8 பேர் உட்பட 15 இந்தியர்கள் கடலில் படகு கவிழ்ந்த விபத்தின் காரணமாகப் பலியாயினர் என்ற செய்தி அதிர்ச்சியும் துயரமுமான செய்தியாகும்.
தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களிலிருந்து மகிழ்ச்சி உலாச் சென்ற இடத்தில் ஏற்பட்ட இந்த நிகழ்வு நமது வேதனைக்கும், துயரத்திற்கும் உரியதாகும்.
அவர்களை இழந்து வாடும் குடும்பத்திற்கும், வணிக உலகத்தாருக்கும் ஆறுதலையும், மறைந்த வர்களுக்கு இரங்கலையும் தெரிவிக்கிறோம்.
ஒன்றிய, மாநில அரசுகள் உயிரிழந்தவர்களின் உடல்களை அந்தந்த ஊர்களுக்கு அனுப்பவும், அவர்களை நம்பி வாழ்ந்துவரும் குடும்பத்திற்குத் தேவையான உதவிகளைச் செய்யவும் மனிதாபிமான முறையில் முன் வர வேண்டும் என்றும் அரசுகளை கேட்டுக் கொள்கிறோம்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
12.07.2026
