புதுடில்லி, ஜூலை 12 அரசு விழாக்களில் தேசிய கீதத்திற்கு முன்பாக தேசிய பாடலான ‘வந்தே மாதரம்’ பாடுவதைக் கட்டாயமாக்கி ஒன்றிய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது தொடர்பாக மாநில அரசுகளுக்கு அனுப்பப் பட்டுள்ள சுற்றறிக்கையில், அரசு விழாக்கள் தொடங்கும் போது ‘வந்தே மாதரம்’ பாடல் முழுமையாகவும், துல்லியமான உச்சரிப்புடனும் பாடப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னரே தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனுடன், ‘வந்தே மாதரம்’ பாடலை அவமதிப்பதை தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கும் வகையில் விரைவில் புதிய மசோதா கொண்டுவரப்படும் எனவும் ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
இந்த உத்தரவு நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு சார்ந்த விழாக்களுக்கும் பொருந்தும் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
மாநிலப் பாடல் முதலில்!
மேலும், மாநிலப் பாடல்கள் உள்ள மாநிலங்களில், முதலில் மாநிலப் பாடல் பாடப்பட்டாலும், அதையடுத்து ‘வந்தே மாதரமும்’, அடுத்து ‘ஜனகன மண’வும் பாடப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு
உள்ளது.
