அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ கட்டாயமாம்; தேசிய கீதத்திற்கு முன் பாட ஒன்றிய அரசு உத்தரவு – மாநிலப் பாடல் முதலில் இருக்கலாம்!

1 Min Read

புதுடில்லி, ஜூலை 12 அரசு விழாக்களில் தேசிய கீதத்திற்கு முன்பாக  தேசிய பாடலான ‘வந்தே மாதரம்’ பாடுவதைக் கட்டாயமாக்கி ஒன்றிய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாக மாநில அரசுகளுக்கு அனுப்பப் பட்டுள்ள சுற்றறிக்கையில், அரசு விழாக்கள் தொடங்கும் போது  ‘வந்தே மாதரம்’ பாடல் முழுமையாகவும், துல்லியமான உச்சரிப்புடனும் பாடப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னரே தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனுடன், ‘வந்தே மாதரம்’ பாடலை அவமதிப்பதை தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கும் வகையில் விரைவில் புதிய மசோதா கொண்டுவரப்படும் எனவும் ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

இந்த உத்தரவு நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு சார்ந்த விழாக்களுக்கும் பொருந்தும் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

மாநிலப் பாடல் முதலில்!

மேலும், மாநிலப் பாடல்கள் உள்ள மாநிலங்களில், முதலில் மாநிலப் பாடல் பாடப்பட்டாலும், அதையடுத்து ‘வந்தே மாதரமும்’, அடுத்து ‘ஜனகன மண’வும் பாடப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு
உள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *