ராமன் கோயில் காணிக்கை மோசடி: விசாரணை குழு முடிவுகள் கசிவு உச்சநீதிமன்றம் தலையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும்! சமாஜ்வாதி எம்.பி. வலியுறுத்தல்

1 Min Read

புதுடில்லி, ஜூலை 10-  அயோத்தி ராமன் கோயில் காணிக்கை திருட்டை விசா​ரிக்​கும் எஸ்அய்டி​யின் முடிவு​கள் கசிந்து விட்​ட​தாக அயோத்தி, சமாஜ்​வாதி கட்சியின்  நாடாளுமன்ற உறுப்பினர் அவதேஷ் பிர​சாத் புகார் கூறி​யுள்​ளார்.

அயோத்தி ராமன் கோயில் காணிக்கை திருட்டு விவ​காரம் தொடர்ந்து சூடு​பிடித்து வரு​கிறது. இந்த விவ​காரத்​தில் உ.பி.​யின் ஆளும் பாஜக​வுக்கு எதிர்க்​கட்​சிகள் தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வரு​கின்​றன. தீவிர​மான கேள்வி​களை எழுப்பி வருகின்றன. அயோத்தி தொகுதி சமாஜ்​வாதி நாடாளுமன்ற உறுப்பினரான அவதேஷ் பிர​சாத் எஸ்​அய்டி மீது கேள்வி எழுப்​பி​யுள்​ளார்.

விசாரணைக் குழு முடிவு கசிவு!

இது குறித்து அவதேஷ் பிர​சாத் கூறிய​தாவது:

ராமன் கோயில் காணிக்கை திருட்​டின் விசா​ரணைக்கு இனி எந்த அர்த்​த​மும் இல்லை. அதன் முடிவு​கள் ஏற்​கெனவே கசிந்​து​விட்​டன. நான் இதை என் சொந்​தக் கருத்​தாகச் சொல்​ல​வில்​லை. முற்​றி​லும் ரகசிய​மாக வைக்​கப்பட வேண்​டிய எஸ்​அய்டி அறிக்​கை​யின் அடிப்படையிலேயே பேசுகிறேன். இப்​போது அந்த அறிக்கை ஊடகங்​களில் வெளி​யாகி​விட்​ட​தால்,  இந்த விசா​ரணை​யின் நோக்கமே சிதைந்​து​விட்​டது.

ராமன் கோயில் காணிக்கை திருட்டு என்​பது கோடிக் ​கணக்​கான ராம பக்​தர்​களின் நம்​பிக்​கை​யின் மீதான தாக்​குதல். இதில் பக்திக்கு துரோகம் இழைக்​கப்​பட்​டுள்​ளது. ஏழைகளு​டன் ஒரு பெரிய விளை​யாட்டு விளை​யாடப்​பட்​டுள்​ளது. இந்த விவகாரத்தில் ஒரே வழி​தான் உள்​ளது. உச்ச நீதி​மன்​றம் இதில் தலை​யிட்டு நடவடிக்கை எடுக்க வேண்​டும். நீதி​மன்​றம் முன்​வந்து ஒரு குழுவை அமைக்க வேண்​டும். அக்​குழு​வின் விசாரணையில் குற்​ற​வாளி​கள் அடை​யாளம் காணப்​பட்​டு, அவர்கள் மீது மிகக் கடுமை​யான நடவடிக்கை எடுக்​கப்​பட வேண்டும்​.

இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *