கண்காணிப்பு விமானங்களுக்கான தொழில் நுட்பங்களை உருவாக்கும் வான்வழி அமைப்பு மய்யம் ஓசூரில் அமைக்கிறது ‘டிட்கோ’

1 Min Read

சென்னை, ஜூலை 8- டி.ஆர்.டி.ஓ., எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்புடன் இணைந்து, கண்காணிப்பு விமானங்களுக்கான தொழில்நுட்பங்களை உருவாக்கும், வான்வழி அமைப்பு மய்யத்தை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில், ‘டிட்கோ’ நிறுவனம் அமைக்க உள்ளது.

நம் நாட்டின் ராணுவத்திற்கான ஆயுதங்கள், ஏவுகணைகள், நவீன போர் சாதனங்கள் போன்றவற்றை டி.ஆர்.டி.ஓ., எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு உருவாக்கி வருகிறது.

இதன் கீழ் செயல்படும் விமான மேம்பாட்டு முகமை, 16,000 கோடி ரூபாய் முதலீட்டில் நம் நாட்டிலேயே அதிநவீன போர் விமானங்களை தயாரிக்க, போர் விமான ஒருங்கிணைப்பு மற்றும் மேம்பட்ட விமான சோதனை மய்யத்தை அமைக்க, ‘டிட்கோ’ எனப்படும் தமிழ்நாடு தொழில் முன்னேற்ற அதிகாரிகள் பேச்சு நடத்தி வந்தனர். இதற்காக ஓசூரில் நிலம் வழங்கவும் அரசு முன்வந்தது. ஆனால், அந்த மய்யத்தை, ஆந்திராவில், புட்டபர்த்தியில் அமைக்கும் பணிகளை விமான மேம்பாட்டு முகமை தொடங்கிவிட்டது. தற்போது, வான்வழி அமைப்பு மய்யத்தை, டி.ஆர்.டி.ஓ., உடன் இணைந்து, ஓசூரில் அமைக்கும் முயற்சியில், ‘டிட்கோ’ நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

விரைவில் அறிவிப்பு

இதுகுறித்து, தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “போர் விமான வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு மய்யம் மற்றும் வான்வழி அமைப்பு மய்யம் ஆகியவற்றை தமிழகத்தில் அமைக்க, டி.ஆர்.டி.ஓ., அதிகாரிகளுடன் பேச்சு நடத்தப்பட்டது. ஆனால், விமான வடிவமைப்பு மய்யம் ஆந்திராவுக்கு சென்று விட்டதால், வான்வழி அமைப்பு மையத்தை, தமிழகத்தில் அமைக்க வலியுறுத்தப்பட்டு உள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது” என்றார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *