போபால், ஜூலை 8 மத்தியப் பிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சராக மோகன் யாதவ் உள்ளார். இந்நிலையில், மத்தி யப்பிரதேச மாநிலத்தின் போபாலில் உள்ள அரசுக்குச் சொந்தமான ராஜீவ் காந்தி விஸ்வ வித்யாலயா பல்கலைக்கழகத்தில் கடந்த வாரம் 3.7.2026 அன்று முது கலை கணினித் தேர்வு நடைபெற இருந்தது. ஆனால், 2.7.2026 அன்று நள்ளிரவில் வினாத்தாள்கள் அடங்கிய முத்திரையிடப்பட்ட 9 கவர்கள் திரு டப்பட்டதாகப் பல்கலைக்கழக நிர்வா கத்திற்கு தெரிய வர, கடைசி நேரத்தில் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதாவது 3.7.2026 அன்று காலை 11 மணிக்குத் தேர்வு தொடங்கவிருந்த நிலையில், 9.30 மணிக்கு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும் ரத்து செய்யப்பட்ட தேர்வு மறு அறிவிப்பு வரும் வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் துறை சார்ந்த மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்துப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் அலோக் கூறுகையில், ‘‘வினாத்தாள்கள் காணாமல் போனது குறித்து எனக்குத் தகவல் கிடைத்தது. நான் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று பார்த்தபோது, ஜன்னல் உடைக்கப்பட்டிருப்பதையும், சில பொருட்கள் சிதறிக் கிடப்பதையும் கண்டேன். உடனடியாகப் புகார் அளிக்க உத்தரவிட்டேன். பயோ டெக்னாலஜி துறை இயக்குநர் அர்ச்சனா மற்றும் முதுகலை தேர்வு கட்டுப்பாட்டாளர் ஆகியோருக்குத் தனித்தனியாக விளக்கம் கேட்டு அறிவிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இந்தத் திருட்டுச் சம்பவம், பல்கலைக்கழகத்தின் நற்பெய ரைக் கெடுப்பதற்காக நடத்தப்பட்ட ஒரு பெரிய சதியின் ஒரு பகுதி” என அவர் கூறினார்.
நீட் வினாத்தாள் கசிவு, சிபிஎஸ்இ முறைகேடு, மகாராட்டிரா டெட் வினாத்தாள் கசிவு சம்பவங்களுக்கு இடையே பாஜக ஆளும் மத்தியப் பிரதேச மாநிலத்தில் வினாத்தாள்கள் காணாமல் போனதால், பல்கலைக்கழக முதுகலைத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாணவர்கள் மூலம் அம்பலமான முறைகேடு
வினாத்தாள் காணாமல் போன சம்பவம், கடந்த வாரம் 2.7.2026 அன்று நிகழ்ந்தது. ஆனால், இந்த விஷயத்தை ஆளும் ம.பி., பாஜக அரசு மற்றும் கோடி மீடியா ஊடகங்கள் மூடி மறைத்துள்ளன. மாணவர்களின் சமூக வலைதள குற்றச்சாட்டின் அடிப்படையில் உள்ளூர் யூடியூப் சேனல் மூலம் இந்த விஷயம் போபால் நகரத்தை விட்டு வெளியுலகிற்குத் தெரிய வந்துள்ளது. அதன்பின்னரே, இந்தச் செய்தி வெளியில் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
