அசாம் சட்டமன்றத்தில் ஹிந்தி அலுவல் மொழியாக அங்கீகாரம் அசாமி அடையாளம் சிதைக்கப்படும் அச்சம்

1 Min Read

திஸ்பூர், ஜூலை 8 அசாம் சட்டமன்றத்தின் நடப்பு ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று ஜூலை 6 முதல் தொடங்கியுள்ள நிலையில், சட்டமன்றத்தின் அலுவல் மொழிகள் பட்டியலில் இந்தி மொழியும் அதிகாரப்பூர்வமாக இணைக்கப் பட்டுள்ளது. இந்த முடிவு மாநிலத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

ஹிந்தி மொழிக்கு அங்கீகாரம்

இதுவரை அசாம் சட்டமன்றத்தில் அசாமி, ஆங்கிலம் மற்றும் போடோ ஆகிய 3 மொழிகள் மட்டுமே அலுவல் மொழிகளாக இருந்தன. தற்போது தேசிய அளவில் இந்தி மொழிக்கு அங்கீகாரம் அளிக்கும் நோக்கில் இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.

சபாநாயகர் ரஞ்ஜித் குமார் தாஸ் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிகள் அடங்கிய குழு கூட்டத்தில் இந்த தீர்மானத்திற்கு ஒருமனதாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி இனி சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது உரைகளை இந்தியிலும் நிகழ்த்த முடியும்.

  பெயர் மாற்றம்

இதனுடன் சட்டமன்ற நடவடிக் கைகளை நேரடியாக ஒளிபரப்பும் ‘ஏ.எல்.ஏ’ தொலைக்காட்சி சேனலின் பெயரும் நாளை முதல் ‘அசாம் விதான் சபா டிவி’ என மாற்றப்பட உள்ளது.

எதிர்ப்புக் குரல்கள்

இந்த முடிவுக்கு பல்வேறு அமைப் புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. “அசாமின் மொழி மற்றும் கலாச்சார அடையாளம் சிதைக்கப்படும் அபாயம் உள்ளது” என அவர்கள் கருத்து தெரி வித்துள்ளனர். அசாமி மொழியின் முக்கியத்துவம் குறையும் என்ற அச்சமும் எழுந்துள்ளது.

இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் இந்த புதிய விதிமுறை அமலுக்கு வருகிறது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *